மலேசிய கூட்டரசு சாலை 19
மலேசிய கூட்டரசு சாலை 19 (ஆங்கிலம்: Malaysia Federal Route 19; மலாய்: Laluan Persekutuan Malaysia 19) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சாலை ஆகும்.[1] இந்தச் சாலை, நெகிரி செம்பிலான், உலு கென்டோங் கிராமத்தையும்; மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தின் சிம்பாங் அம்பாட் நகரத்தையும் இணைக்கிறது.[2] பொதுஇந்தச் சாலை 68.50 கி.மீ. (42.56 மைல்) நீளம் கொண்டது; மற்றும் மலாக்கா அலோர் காஜா மாவட்டத்தில் செல்லும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. மலேசிய கூட்டரசு சாலை 19-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3] அலோர் காஜாஅலோர் காஜா நகரம், மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தின் தலை பட்டணம் ஆகும். மலாக்காவில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், ஜாசின் நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அதிகமான போக்குவரத்து நெரிசல் இல்லாத ஓர் அமைதியான நகரம். மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அலோர் காஜா மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தை அலோர் காஜா என்றே அழைக்கிறார்கள். மாவட்டத்திற்கும் அதன் தலைநகரத்திற்கும் ஒரே பெயர்தான். சொல் பிறப்பியல்அலோர் என்றால் நீர்ப்பாதை; காஜா என்றால் யானை என்று மலாய் மொழியில் பொருள்படும். முன்பு காலத்தில் யானைகள் அலோர் காஜாவில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தன. அந்த யானைகளுக்கு ஒரு வெள்ளை யானை தலைமை யானையாக இருந்தது. அந்த யானைகள் ஒரே ஒரு பாதையைப் பயன்படுத்தின. அந்தப் பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அந்த இடத்திற்கு அலோர் காஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.[4] விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia