செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 14 அல்லது செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 14 அல்லது Jerangau–Jabor Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 14 அல்லது Lebuhraya Jerangau-Jabor) என்பது தீபகற்ப மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டம், கோலா திராங்கானு நகரத்தையும்; [பகாங்]], குவாந்தான் நகரத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.[3] 179.63 கி.மீ (111.62 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை மலேசியாவின் இரு முக்கிய நகரஙகளான கோலா திராங்கானு நகரம்; மற்றும் குவாந்தான் நகரம்; ஆகிய இரு மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கும் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது. அமைவுமலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3-யுடன் இணையாகச் செல்கிறது. இதில் மலேசிய கூட்டரசு சாலை 3 என்பது ஒரு கடலோர நெடுஞ்சாலையாகும்; செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை எனும் மலேசிய கூட்டரசு சாலை 14; உட்புறப் பகுதி வழியாகச் செல்கிறது. மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3; ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளும் ஒரே மாதிரியானவை (சுமார் 200 கி.மீ.) நீளம் கொண்டவை. எனினும் மலேசிய கூட்டரசு சாலை 3 எனும் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை தன் வழியில் குறைவான நகரங்களைக் கடந்து செல்கிறது. அந்த வகையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது. 2001-ஆம் ஆண்டில் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை கட்டப்படும் வரையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலைதான், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.[4] பொதுமலேசிய கூட்டரசு சாலை 13-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது பகாங் மாநிலத்தின் [[குவாந்தான்] நகரத்தின் மாற்றுவழிச்சாலையில் (Kuantan Bypass) உள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 13-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. இடைமாற்று வழிகளின் பட்டியல்
விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia