மலேசிய கூட்டரசு சாலை 50
பத்து பகாட்-குளுவாங்-மெர்சிங் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 50 (ஆங்கிலம்: Malaysia Federal Route 50; அல்லது Batu Pahat–Kluang–Mersing Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 50 அல்லது Jalan Batu Pahat–Kluang–Mersing) ஜொகூர் மாநிலத்தில், மேற்கில் உள்ள பத்து பகாட் நகரத்தையும் கிழக்கில் உள்ள ஜெமாலுவாங் நகரத்தையும் இந்தச் சாலை இணைக்கிறது. பொதுஆயர் ஈத்தாம் மாற்றுச் சாலை வழியாக மலேசிய தெற்கு வழித்தடத்தை அடைவதற்கு இது ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது. இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலேசிய கூட்டரசு சாலை 5-இன் சாலைப் பரிமாற்றத்தில், சோகா மலைக்கு (Mount Soga) அருகில், பத்து பகாட் நகரில் அமைந்துள்ளது. வரலாறு1911-ஆம் ஆண்டில், ஜொகூர் மாநில அரசு பிரித்தானிய காலனி அரசாங்கத்துடன் இணைந்து ஜொகூர் பாருவில் இருந்து பத்து பகாட் மற்றும் மூவார் வரையிலான சாலை வலையமைப்பை உருவாக்கியது.[2] இதன் விளைவாக, பத்து பகாட்-குளுவாங்-மெர்சிங் சாலை 1919-இல் நிறைவடைந்தது.[3] அங்கு இன்றைய மலேசிய கூட்டரசு சாலை 5-இன் ஒரு பகுதி உள்ளது.[4] 2002-ஆம் ஆண்டு, பத்து பகாட்டில் இருந்து குளுவாங் வரையிலான நான்கு வழிப்பாதையுடன், இந்த மலேசிய கூட்டரசு சாலை 50 ஓரளவிற்கு மேம்படுத்தப்பட்டது. மீதமுள்ள சாலை இரண்டு வழிச்சாலையாக உள்ளது.[4] சனவரி 13, 2007 அன்று, குளுவாங்-மெர்சிங் சாலையில் உள்ள சுங்கை செம்பெரோங் பாலம் திடீர் வெள்ளத்தின் காரணமாக இடிந்து விழுந்தது. சாலைத் தரம்இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[5] ககாங்-கங்கார் லெங்கோர்-ஜெமாலுவாங் சாலைப் பகுதியில் குரங்குகள் மற்றும் யானைகளின் நடமாட்ட அடையாள அறிவிப்புகள் உள்ளன. விளக்கம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia