மலேசிய கூட்டரசு சாலை 23
மலேசிய கூட்டரசு சாலை 23 அல்லது மூவார்–தங்காக்–சிகாமட் சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 23; அல்லது Muar–Tangkak–Segamat Road; மலாய்: Laluan Persekutuan Malaysia 23 அல்லது Jalan Muar–Tangkak–Segamat) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலை ஆகும்.[1] வடக்கில் சிகாமட் நகரத்தையும்; தெற்கில் பாரிட் பூங்கா நகரத்தையும் இணைக்கும் இந்தச் சாலை, தங்காக் வழியாக, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்திற்கான ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.[2] பொதுஇந்தச் சாலை 76.27 கி.மீ. (47.39 மைல்) நீளம் கொண்டது; மற்றும் ஜொகூர் சிகாமட் மாவட்டத்தில் ஒரு முக்கியச் சாலையாகவும்; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கியச் கூட்டரசு சாலையாகவும் விளங்குகிறது. மலேசிய கூட்டரசு சாலை 23-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3] சிறப்புக் கூறுகள்இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:
சாலைகள் மேம்பாடுடிசம்பர் 7, 2007 அன்று, சிகாமட்டில் இருந்து தங்காக் வரையிலான 40 கி.மீ தூரத்தை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மேம்படுத்த மலேசிய மத்திய அரசு முடிவு செய்தது. இந்தச் சாலையின் கட்டுமானம் 2015-இல் நிறைவடைந்தது. இதற்கிடையில், மலேசிய கூட்டரசு சாலை 23-இன் இரண்டாவது பகுதி ஜெமிந்தா நகரில் இருந்து லேடாங் மலை தேசியப் பூங்கா வரையிலான சாலையின் கட்டுமானம் நிறைவடைந்தது. கட்டுமானம்63-கி.மீ. நீளம் கொண்ட சிகாமட்-தங்காக்-மூவார் நெடுஞ்சாலையின் கட்டுமானம், 2011 இல் தொடங்கியது. கட்டமானத்திற்கு ரிங்கிட் RM 750 மில்லியன் முதல் ரிங்கிட் RM 770 மில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. மலேசிய கூட்டரசு சாலை 23-இல் உள்ள 14 பாலங்களை மேம்படுத்துவது; மற்றும் ஐந்து தொகுப்புகளாகச் சாலைகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மலேசிய கூட்டரசு சாலை 23-இன் கட்டுமானம் 2015 இல் நிறைவடைந்தது. விளக்கம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia