மலேசிய கூட்டரசு சாலை 51
சிரம்பான்-கோலா பிலா சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 51 (ஆங்கிலம்: Malaysia Federal Route 51; அல்லது Seremban-Kuala Pilah Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 51 அல்லது Jalan Seremban-Kuala Pilah) நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பரபரப்பான சாலையாக அறியப்படுகிறது. பொதுஇந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; சிரம்பான் நகரில் மலேசிய கூட்டரசு சாலை 1-இன் சாலைப் பரிமாற்றத்தில் அமைந்துள்ளது. சிரம்பான் நகரில் தொடங்கும் இந்தச் சாலை, பின்னர் அம்பாங்கான் மற்றும் பாரோய் நகர்ப் பகுதிகளில் மலேசிய கூட்டரசு சாலை 97 அதன் பின்னர் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை காராக்-தம்பின் நெடுஞ்சாலைஇதைத் தொடர்ந்து தித்திவாங்சா மலைத்தொடர் வழியாகச் சென்று புக்கிட் புத்துஸ் கிராமப் பகுதியில் உள்ள இறுதியில் இந்தச் சாலை, காராக்-தம்பின் நெடுஞ்சாலை அமைவு1920-களில் பிரித்தானியர்களால் இந்தச் சாலை அமைக்கப்பட்டது. 48 மீட்டர் உயரமுள்ள புக்கிட் புத்தூஸ் மேம்பாலம் மலேசியாவின் நான்காவது உயரமான பாலமாகும். புக்கிட் புத்தூஸ் சாலை என்று அழைக்கப்படும் பாரோய் முதல் உலு பெண்டுல் வரையிலான சிரம்பான்-கோலா பிலா சாலை, அதன் குறுகிய மற்றும் ஆபத்தான கூர்மையான சாலை முனைகளுக்குப் பெயர் பெற்றது. புக்கிட் புத்தூஸ் மேம்பாலம் உட்பட புதிய 6.7 கிமீ புறவழிச்சாலையின் கட்டுமானம் 2006=ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2009-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தது. நவம்பர் 2009-இல் புறவழிச்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. பழைய சிரம்பான்-கோலா பிலா சாலை; புக்கிட் புத்தூஸ் லாமா சாலை சாலைத் தரம்இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2] விளக்கம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia