நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை
நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 32 (ஆங்கிலம்: Malaysia Federal Route 32; அல்லது Nilai–KLIA Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 32 அல்லது Lebuhraya Nilai–KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1] முன்பு இந்தச் சாலை சிலாங்கூர் மாநிலச் சாலை B20 என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலச் சாலை N20 என்றும் அறியப்பட்டது. எனினும் தற்போது, மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள மலேசிய பல்லூடகப் பெருவழி பகுதிக்கு ஒரு முக்கிய நெடுஞ்சாலையாகவும் அமைகிறது.[2] பொதுநீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை 26.0 கி.மீ. (16.2 மைல்) நீளம் கொண்டது. இந்தச் சாலை மேற்கில் சிலாங்கூர் மாநிலத்தின் தஞ்சோங் டுவா பெலாஸ் (Tanjung Dua Belas) நகரத்தையும்; கிழக்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தையும் இணைக்கிறது. இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தில் தொடங்குகிறது. 2010-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை மலேசிய கூட்டரசு சாலை 32 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது. மலேசிய பொதுப்பணித் துறைஇந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[3] விளக்கம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia