வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை
வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 20 (ஆங்கிலம்: Malaysia Federal Route 20; அல்லது North Klang Straits Bypass; மலாய்: Laluan Persekutuan Malaysia 20) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள ஒரு சாலை ஆகும்.[1] இந்தச் சாலை, பல சாலைகளின் உதவியுடன் சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தை (Port Klang) இணைக்கிறது.[2] பொது1970-களின் பிற்பகுதியில் கிள்ளான் துறைமுகத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கியது. கட்டுமானம் 1983-இல் தொடங்கப்பட்டு 1 சனவரி 1985-இல் நிறைவடைந்தது. இந்தச் சாலை 15.1 கி.மீ. (9.4 மைல்) நீளம் கொண்டது; மற்றும் சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்திற்குச் செல்லும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான சரக்கு சுமையுந்துகள் செல்கின்றன. மலேசிய கூட்டரசு சாலை 19-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3] சிறப்புக் கூறுகள்இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:
விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia