பந்திங்-செமினி சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 31 (ஆங்கிலம்: Malaysia Federal Route 31; அல்லது Banting–Semenyih Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 31 அல்லது Jalan Banting–Semenyih) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]
இந்தச் சாலை, மலேசியாவில் மிகப் பிரபலமான மோரிப் கடற்கரைக்குச் செல்லவும்; கேரி தீவு செல்வதற்கும் பயன்படுத்தப் படுகிறது.
பொது
புத்ராஜெயா வட்டச் சாலை 45.8 கி.மீ. (28.5 மைல்) நீளம் கொண்டது; மற்றும் இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5(JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]
காஜாங் நகரின் தென்கிழக்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகருக்குத் தென்கிழக்கே 28 கி.மீ. (17 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது.
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை
செமினியின் சுற்றுப்புறங்கள் மலைப் பாங்கான சூழலைக் கொண்டவை. இந்த நகருக்கு அருகில் உள்ள மிக உயர்ந்த மலை புக்கிட் ஆராங் (Bukit Arang); 560 மீ (1,840 அடி) உயரம் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த பல அருவிகளுக்கு, செமினி நகரம் பிரபலமானது.[4]
இந்த நகரத்தில் தீக்கோழி வளர்ப்புப் பண்ணை (Ostrich Wonderland Show Farm) மிகவும் பிரபலமானது.[5]காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை மற்றும் காஜாங்-சில்க் நெடுஞ்சாலை போன்ற புதிய நெடுஞ்சாலைகள் மூலம் இந்த நகரம் மிகவும் எளிதாக அணுகக்கூடிய நகரமாக விளங்கி வருகிறது.
விளக்கம்
மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway;மலாய்: Laluan Malaysia)
மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway;மலாய்: Lebuhraya Malaysia)