சுங்கை ஊடாங்–பாயா ரும்புட்–ஆயர் குரோ நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 33 (ஆங்கிலம்: Malaysia Federal Route 33; அல்லது Sungai Udang–Paya Rumput–Ayer Keroh Highway), (SPA Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 33 அல்லது Lebuhraya Sungai Udang–Paya Rumput–Ayer Keroh) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]
முன்பு இந்தச் சாலை மலாக்கா மாநிலச் சாலை M17 என்றும் அறியப்பட்டது. எனினும் தற்போது, மலேசியாவின்மலாக்கா மாநிலத்தில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையாக அறியப்படுகிறது.
பொது
சுங்கை ஊடாங்–பாயா ரும்புட்–ஆயர் குரோ நெடுஞ்சாலை 23.1 கி.மீ. (14.4 மைல்) நீளம் கொண்டது. இந்தச் சாலை மேற்கில் மலாக்கா மாநிலத்தின் சுங்கை ஊடாங்(Sungai Udang) நகரத்தையும்; கிழக்கில் ஆயர் குரோ நகரத்தையும் இணைக்கிறது.
இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலாக்கா மாநிலத்தின் சுங்கை ஊடாங் நகரத்தில் தொடங்குகிறது. 2010-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை மலேசிய கூட்டரசு சாலை 33 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.
மலேசிய பொதுப்பணித் துறை
இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5(JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]
வரலாறு
இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானம் 2002-இல் தொடங்கப்பட்டு 2005-இல் நிறைவடைந்தது. 2010-ஆம் ஆண்டில், மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.
விளக்கம்
மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway;மலாய்: Laluan Malaysia)
மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway;மலாய்: Lebuhraya Malaysia)