குண்டூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Guntur East Assembly constituency) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] தடிகொண்டா, மங்களகிரி பொன்னுரு, தெனாலி மற்றும் குண்டூர் மேற்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] முன்னர் குண்டூர்-1 சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்ட இது, 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையில் சில சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகி , நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையின்படி குண்டூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) எனப் பெயரிடப்பட்டது.[3]:15 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது முசுதபா சேக் இத்தொகுதியில் வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இந்தத் தொகுதியில் மொத்தம் 229,830 வாக்காளர்கள் உள்ளனர்.[5]
மண்டலங்கள்
இத்தொகுதியின் கீழ் குண்டூர் மண்டலம் (பகுதி), குண்டூர் (மாநகராட்சி) (பகுதி) மற்றும் குண்டூர் (மாநகராட்சி) - பகுதி எண்.7 முதல் 23 வரை அடங்கியுள்ளன.[6]
சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
குண்டூர் கிழக்கு (2009- தற்போது வரை)
குண்டூர்-1 (1955-2004)
குண்டூர் (1952 மதராசு மாநிலம்)
மேற்கோள்கள்