கெர்த்தே
![]() கெர்த்தே; (ஆங்கிலம்: Kerteh; மலாய்: Kerteh) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கெமாமான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு மாநகரிலிருந்து 96 கி.மீ. தொலைவில் தென்திசையில் உள்ளது. கெர்த்தே நகரில்தான் கெர்த்தே வானூர்தி நிலையமும் உள்ளது. இந்த வானூர்தி நிலையம் பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் வானூர்தி நிலையம் ஆகும். தென் சீனக் கடலில் 100 - 200 கி.மீ. தொலைவில் உள்ள பல்வேறு எண்ணெய் தளங்களுக்கு, பெட்ரோனாஸ் நிறுவனப் பணியாளர்களையும்; எக்சான்மொபில் (ExxonMobil) பணியாளர்களையும்; வானூர்திகள் மூலமாக அனுப்பும் நோக்கத்திற்காக இந்த வானூர்தி நிலையம் உருவாக்கப்பட்டது. பொதுகெர்த்தே ஒரு நகரம் மட்டும் அல்ல. அது ஒரு முக்கிம் ஆகும். அதாவது கெமாமான் மாவட்டத்தில் ஒரு துணைமாவட்டமாகும். கெர்த்தே முக்கிமில் சில கிராமங்கள் உள்ளன. கிராமம் என்பது (மலாய் மொழியில்: Kg - Kampung; ஆங்கிலம்: Village).
தென் சீனக் கடலில் பெட்ரோலியம் எனும் 'கருப்பு தங்கம்' கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கெர்த்தே பிரபலம் அடைந்தது. அதற்கு முன்னர் மற்ற கடற்கரைக் கிராமங்களைப் போல இதுவும் ஓர் அமைதியான கிராமமாகவே இருந்தது. ஒளி நகரம்பெட்ரோனாஸ் பெட்ரோலியத் தொழிற்சாலைகளில் இருந்து அதிக வெளிச்சம் வெளிப்படுவதால், சுற்றுலாப் பயணிகளிடையே "ஒளி நகரம்" என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. அண்மைய காலங்களில் கெர்த்தே நகரில் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.[1] அவற்றில் ஸ்ரீ கெர்த்தே நகரம்; கெர்த்தே விமான நிலையம்; பெட்ரோனாஸ் தொழில்துறை வளாகம்; கெர்த்தே துறைமுகம்; திராங்கானு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்; பெட்ரோனாஸ் வளாகம்; பெட்ரோனாஸ் வளாக பள்ளி; கெர்த்தே பேரங்காடி; கெத்தே மினி அரங்கம் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்.[2] மேற்கோள்கள்
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia