ஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெற்றது.[2]
ஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெற்றது.
முதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்
இரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
மூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
நான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
ஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.
ஒவ்வொரு கட்டத்துக்குமான விரிவான தேர்தல் நிகழ்ச்சி அட்டவணை
2009 பொதுத் தேர்தலுக்கான விரிவான அட்டவணை
தேர்தல் நிகழ்வு
கட்டங்கள்
முதல் கட்டம்
2ம் கட்டம்
3ம் கட்டம்
4ம் கட்டம்
5ம் கட்டம்
கட்டம் 2அ
கட்டம் 2ஆ
கட்டம் 3அ
கட்டம் 3ஆ
கட்டம் 3இ
கட்டம் 5அ
கட்டம் 5ஆ
அறிவிப்பு
திங்கள், 02-மார்ச்
அறிக்கை வெளியீடு
திங்கள், 23-மார்ச்
சனி, 28-மார்ச்
வியாழன், 02-ஏப்ரல்
சனி, 11-ஏப்ரல்
வெள்ளி, 17-ஏப்ரல்
விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி தேதி
திங்கள், 30-மார்ச்
சனி, 04-ஏப்ரல்
வியாழன், 09-ஏப்ரல்
சனி, 18-ஏப்ரல்
வெள்ளி, 24-ஏப்ரல்
விண்ணப்பங்களை கூர்ந்தாய்தல்
செவ்வாய், 31-மார்ச்
Mon, 06-ஏப்ரல்
சனி, 11-ஏப்ரல்
வெள்ளி, 10-ஏப்ரல்
திங்கள், 20-ஏப்ரல்
சனி, 25-ஏப்ரல்
வேட்பாளர்கள் விண்ணப்பங்களை விலக்கிக்கொள்வதற்கான கடைசி தேதி
கட்டம் 2அ - இது மணிப்பூருக்கு மட்டும் (ஏப்ரல் 23 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
கட்டம் 3ஆ - இது ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் (ஏப்ரல் 13, 14 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
கட்டம் 3இ - இது குஜராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & சிக்கிமுக்கு மட்டும் (ஏப்ரல் 10 இம் மாநிலக்களுக்கு \ யூபி-ங்களுக்கு விடுமுறை இல்லை ஆனால் மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களுக்கு அன்று விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
கட்டம் 5ஆ - இது உத்திரப் பிரதேசத்திற்கு மட்டும் (ஏப்ரல் 27 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் (யூபி) வாக்களிக்கும் தேதிகள்
'2009 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்கள்\யூபி க்கான வாக்குப்பதிவு அட்டவணை
குறிப்பு
(*) - சராசரியாக வாக்களித்தோர் (விழுக்காட்டில்)
(**) - வாக்களித்தோர் (விழுக்காட்டில்)
சட்டமன்றத் தேர்தல்
ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே மே 30, ஜூன் 29, ஜூன் 23 ஆகிய தேதிகளில் முடிவதால் இவற்றிற்கு பொதுத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுகிறது
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் இராச்டிரிய ஜனதா தளம் இராம் விலாசு பாசுவான் தலைமையிலான லோக் சன சக்தி கட்சியிடம் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இராச்டிரிய ஜனதா தளம் 24 இடங்களிலும் லோக் சன சக்தி கட்சி 12 இடங்களிலும் போட்டியிடும். காங்கிரசுக்கு 3 இடங்களை அவை ஒதுக்கியுள்ளன.[7]. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு அழைக்கப்படவில்லை. 3 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் காங்கிரசு அதிருப்தியில் உள்ளது. இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.[8]
தமிழகத்தில் பா.ம.கஅதிமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க அக்கட்சியின் பொது குழு முடிவெடுத்துள்ளது,[11][12] அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக உள்ள அன்புமணி இராமதாசு & வேலு ஆகியோர் இன்னும் 2 நாட்களில் பதவி விலக உள்ளனர்.[13][14]
+ மகாராட்டிராவில் சிவசேனாவுக்கும்பாஜகவுக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி சிவசேனா 22 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன [15].
பிஜு ஜனதா தளம்[16][17] - தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்த பிஜு ஜனதா தளம் பாஜகவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது [18]. இது வரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை எனவும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்து அரசில் பங்கேற்பது எனவும் முடிவெடுத்துள்ளது. எனினும் இக்கட்சியை மூன்றாவது அணியில் இணைக்க இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
சமாஜ்வாதி கட்சி உடன் காங்கிரசு உத்திரப்பிரதேசத்தில் வைக்க முயன்ற கூட்டணி, தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக முறிந்தது.[19]
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு உடன் மேற்கு வங்காளத்தில் காங்கிரசு கட்சி உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலை சந்திக்கிறது [20],[21]., உடன்படிக்கைப்படி காங்கிரசு 12 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரசு 28 இடங்களிலும் போட்டியிடும்[22].