உருசிய சைபீரிய நடுவண் மாவட்டம்
சைபீரிய கூட்டாட்சி மாவட்டம் (Siberian Federal District, உருசியம்: Сиби́рский федера́льный о́круг, Sibirsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நடுவண் மாவட்டத்தின் மக்கள் தொகை 17,178,298 என இருந்தது. இதன் பரப்பளவு 4,361,800 சதுர கிலோமீட்டர்கள் (1,684,100 sq mi) ஆகும். நடுவண் மாவட்டத்தின் முழு பகுதியும் ஆசிய கண்டத்திற்குள் உள்ளது. ![]() 13 மே 2000 அன்று சனாதிபதி ஆணையின் பேரில் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. உருசியாவின் மொத்த நிலப்பரப்பில் இது 30% உள்ளடக்கியுள்ளது.[4] உருசிய சனாதிபதி விளாதிமிர் பூட்டின் பிறப்பித்த ஆணைக்கு இணங்க ,2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி கிராய் ஆகியவை சைபீரிய நடுவண் மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, தூரக் கிழக்கு நடுவண் மாவட்டத்தோடு இணைக்கபட்டன.[5] மக்கள்வகைப்பாடுஉள்ளடக்கங்கள்இந்த மாவட்டத்தில் மேற்கு சைபீரிய (பகுதி) மற்றும் கிழக்கு சைபீரிய பொருளாதார பகுதிகள் மற்றும் பத்து கூட்டாட்சி அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது :
சனாதிபதி தூதர்கள் பட்டியல்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia