ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Jolarpet Assembly constituency), என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி சீரமைப்பின் போது நாட்டறம்பள்ளி சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இதர பிரிவினர் உள்ளனர். 2021 பொதுத்தேர்தலின் போது மொத்த வாக்காளர்களில் 1,38,466, ஆண்கள் 1,18,449, பெண்கள் 1,20,010, மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் உள்ளனர். ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் 19 ஊராட்சிகளும், ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 38 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.[2] தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, பெத்தகல்லுபள்ளி மற்றும் கேத்தாண்டபட்டி கிராமங்கள்.
கொத்தூர் (ஆர்.எப்), கொத்தூர், சொரைகாயல்நத்தம், நயணசெருவு, தோப்புலகுண்டா, கத்தாரி, ஆத்தூர்குப்பம், குடியன்குப்பம், சின்னமோட்டூர், மண்டலவாடி, ஜோலார்பேட்டை (ஆர்.எப்), மங்கலம் (ஆர்.எப்), மங்கலம் விரிவாக்கம், ஏலகிரி மலை, நாகலத்து (ஆர்.எப்), நாகலத்து (விரிவாக்கம் ஆர்.எப்), பொன்னேரி, ஏலகிரி கிராமம், காட்டேரி, திரியாலம், வேடட்ப்பட்டு, பந்தாரப்பள்ளி, பச்சூர், பையனப்பள்ளி, வெலகல்நத்தம், நந்திபெண்டா (ஆர்.எப்), மண்டலநாயனகுண்டா, கொல்லங்குடை, பனியாண்டபள்ளி, மல்லபள்ளி, அக்ரஹாரம், அம்மனங்கோயில், மூக்கனூர், அச்சமங்கலம், தாமலேரி முத்தூர், பால்னாங்குப்பம், பாச்சல், கதிரிமங்கலம், பெரியகரம், புத்தகரம், சந்திரபுரம், விருபாட்சிபுரம், தோக்கியம், கந்திலி மற்றும் சின்னகந்திலி கிராமங்கள். நாட்ரம்பள்ளி (பேரூராட்சி) மற்றும் ஜோலார்பேட்டை(பேரூராட்சி).[3]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia