தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன் (Thamizhachi Thangapandian, பிறப்பு: 25 சூலை 1962) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞரும் சமூக ஆர்வலரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] பிறப்புதமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுமதி ஆகும். இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான தங்கப்பாண்டியனின் மகளும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான (13.5.2006 – 15.5.2011) தங்கம் தென்னரசின் அக்காவும் ஆவார்.[2] கல்விசுமதி தான் பிறந்த மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும் விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பெற்றார்.[3] மதுரையில் உள்ள மீனாட்சி அரசுப் பெண்கள் கல்லூரியில் பயின்று புதுமுக வகுப்பில் தேறினார். பின்னர் மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.[4] ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கிலப் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார். ஆசிரியர் பணிசென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். குடும்பம்தமிழச்சி என்னும் சுமதி, காவல்துறை அதிகாரி சந்திரசேகர் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அரசியல்தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது திமுகவின் மகளிரணியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். இவரது தொகுப்புகள் விகடன் இதழில் வெளிவந்துள்ளன. இளவயதில் பரதநாட்டியம் கற்றவர். 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெ. ஜெயவர்தனை விட 2,62,223 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[5] படைப்புகள்தமிழச்சி தன் தந்தை தங்கபாண்டியன் இறந்தபொழுது கையறுநிலைப் பாடல் ஒன்றை எழுதினார். குங்குமம் இதழில் வெளிவந்த இக்கவிதையே இவருடைய முதற்படைப்பாகும். பின்னர் தொடர்ந்து பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை, த. சுமதி என்கிற தன் இயற்பெயரிலே எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் இவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கின்ற இவரது சிறுகதைகள் சில ஆனந்த விகடன் மற்றும் அவள் விகடனில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்ந்த கவித்துவம், சொல்வளம், தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, தமிழ் தேசிய நலனில் கரிசனம், உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களைத் தேடிப் படைக்கும் ஆற்றல் - என விரிவான கவித்தளத்தில் இவரது கவிதைகள் இயங்குகின்றன. பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றிருக்கின்ற இவருக்கு, அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத் தளத்தில் ஆர்வமும், பங்கேற்பும் உண்டு. பிசாசு என்ற திரைப்படத்தில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார். கவிதைகள், சிறு பத்திரிகைகளிலும், அதிகப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பன்னாட்டு அரங்குகளின் இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்றிருக்கின்றார். இவரது படைப்புகளில் சில பின்வருமாறு; கவிதைத் தொகுப்புகள்
கட்டுரைத் தொகுப்புகள்
ஆராய்ச்சி தொகுப்புகள்
சிறுகதை நூல்
ஆங்கில நூல்கள்
விமர்சன நூல்கள்
நேர்காணல் தொகுப்பு
தமிழ் நாடக அரங்கில் பங்களிப்புகள்
தொகுப்புகள்தமிழச்சி தன்னுடைய படைப்புகளைப் பற்றி பிறர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம் என்னும் தலைப்பில் நூலாக 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதில் கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந.முருகேச பாண்டியன், அ.ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதிர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர்.மீரா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.[6] தமிழச்சிக்கு பிறர் எழுதிய கடிதங்களைத் தொகுத்து காற்று கொணர்ந்த கடிதங்கள் என்னும் தொகுப்பை 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[7] போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia