அமெரிசியம் முக்குளோரைடின் அறுநீரேற்று வடிவம் ஒற்றைச்சாய்வு படிகவமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பில், ஏ=970.2 பை.மீ, பி= 656.7 பை.மீ , சி= 800.9 பை.மீ, β = 93°.37’ மற்றும் இடக்குழு: P2/n.என்ற அமைப்பு காணப்படுகிறது[5]
வினைகள்
இலந்தனைடு கலவைகளை தனித்தனியாகப் பிரிக்க அமெரிசியம்(III) குளோரைடு மின் தூய்மையாக்கல் முறை ஆராயப்பட்டு வருகிறது. அமெரிசியம்(III) குளோரைடு உருவாக்கத்தில், நிலையான கிப்சின் ஆற்றலானது, எஞ்சியிருக்கும் இலந்தனைடு குளோரைடுகளின் ஆற்றல் உருவாக்கத்திலிருந்து வேறுபட்டதாகும்[6]
இவ்வேறுபாட்டைப் பயன்படுத்தி பதனிடப்படாத கலவையுடன் சோடியம் குளோரைடு போன்ற உப்புகளைச் சேர்த்து உருக்குவதன் மூலம் புளூட்டோனியத்திலிருந்து அமெரிசியத்தை பிரித்தெடுக்க முடியும்[7]
↑L. B. Asprey, T. K. Keenan, F. H. Kruse: "Crystal Structures of the Trifluorides, Trichlorides, Tribromides, and Triiodides of Americium and Curium", Inorg. Chem.1965, 4 (7), 985–986; எஆசு:10.1021/ic50029a013.
↑John H. Burns, Joseph Richard Peterson: "The Crystal Structures of Americium Trichloride Hexahydrate and Berkelium Trichloride Hexahydrate", Inorg. Chem.1971, 10 (1), 147–151; எஆசு:10.1021/ic50095a029.