கிள்ளான் மக்களவைத் தொகுதி
கிள்ளான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Klang; ஆங்கிலம்: Klang Federal Constituency; சீனம்: 巴生联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P110) (Dewan Rakyat) ஆகும்.[1] கிள்ளான் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 56 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2] பொதுகிள்ளான் நகரம்கிள்ளான் நகரம் (Klang) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகத் திகழ்ந்து உள்ளது. இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது. கிள்ளான் எனும் பெயரில் கிள்ளான் மாவட்டமும் பெயர் கொண்டு உள்ளது. கிள்ளான் நகரம், கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்து உள்ளது. கிள்ளான் வரலாறு14-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் எனும் இலக்கியப் படைப்பில் கிள்ளான் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 1409 முதல் 1433 வரை மலாக்காவிற்குப் பயணம் செய்த சீனக் கடல் படைத் தளபதி செங் கோவின் தொடக்கக் கால கடல்சார் வரைபடங்களில் கிள்ளான் ஆறு குறிக்கப்பட்டு பெயரிடப்பட்டும் உள்ளது. துன் பேராக்15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் கிள்ளான் இருந்தது. மலாக்காவின் வரலாற்றுத் தலைவர் என்று கொண்டாடப்படுபவர் துன் பேராக். இவர் கிள்ளான் நகரத்தில் இருந்து தான் மலாக்காவிற்குச் சென்று மலாக்காவின் மூத்த அமைச்சரனார். 17-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூர் கடலோரப் பகுதிகளில், இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ் மக்கள் குடியேறத் தொடங்கினர். சிலாங்கூர் சுல்தானகம் 1766-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3][4] கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia