கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்ஆங்கிலம்: List of bus routes in Greater Kuala Lumpur;மலாய்: Senarai laluan bas di Lembah Klang;சீனம்: 巴生谷巴士路綫列表) என்பது மலேசியா, கோலாலம்பூர், சிலாங்கூர்; மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பேருந்து வழித்தடங்களில்; பல்வேறு பேருந்து நடத்துனர்களால் இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியல் ஆகும்.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளும் நேரங்களும் மலேசிய நேரம்ஒ.ச.நே + 08:00 28 அக்டோபர் 2024-இன் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோலாலம்பூரில் மட்டும் 8 பேருந்து வழித்தடங்கள் உள்ளன:[1][2]
ரேபிட் பேருந்து மூலம் இயக்கப்படும் ரேபிட் கேஎல் பேருந்துகள்; அம்பாங், பகாங் சாலை, செராஸ், டாமன்சாரா வழித்தடங்கள்; மற்றும் அனைத்து எல்ஆர்டி - எம்ஆர்டி பேருந்து வழித்தடங்கள்; மற்றும் பெரும்பாலான பேருந்து வழித்தடங்களில் உள்ள அனைத்து நிலையிலான பேருந்து வழித்தடங்களையும் இயக்கும் மிகப்பெரிய பேருந்து நிறுவனமாகும்.
ரேபிட் பேருந்துகள் ஈப்போ வழித்தடம், சுங்கை பீசி வழித்தடம், கிள்ளான் லாமா சாலை வழித்தடம்; மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் சேவை செய்கின்றன.
பெரும் கோலாலம்பூரின் பேருந்துப் வழித்தடங்கள்
வழித்தடங்கள்
அமைவு:U – மேலடுக்கு பேருந்துகள்; T – உள்ளூர் பேருந்துகள்; LRT – எல்ஆர்டி பேருந்துகள்; MRT – எம்ஆர்டி பேருந்துகள்; NP – நாடி புத்ரா, புத்ராஜெயா; BET – விரைவுப் பேருந்துகள்
குறிப்பு
*
பெரும்பாலான அரசு பேருந்துகள் இலவசச் சேவையை வழங்குகின்றன
பெட்டாலிங் ஜெயா மாநகரப் பேருந்து(Bas Bandar PJ) என்பது பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) கண்காணிக்கிறது; மே 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது.[3]
இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து(Smart Selangor) என்பது சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில அரசு கண்காணிக்கிறது; சூலை 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து அமைப்பு 55 இடங்களுக்கு இலவசச் சேவையை வழங்குகிறது.[10]
கோ கேஎல் நகர பேருந்து(Go KL City Bus) என்பது மலேசியா, கோலாலம்பூர் நகர மையத்தின் இலவசப் பேருந்து சேவையாகும். முன்னர் மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (Land Public Transport Agency Malaysia) மூலம் நிர்வகிக்கப்பட்டது. எனினும், இந்தச் சேவைகளை கோலாலம்பூர் மாநகராட்சி(DBKL) 1 சனவரி 2019-இல் கையகப்படுத்தியது.