தித்திவங்சா நிலையம் அல்லது தித்திவங்சா விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Titiwangsa Station; மலாய்: Stesen Titiwangsa; சீனம்: 蒂蒂旺沙站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும்.
அந்த நான்கு தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பை இந்த நிலையம் அனுமதிக்கிறது.
பொது
தித்திவங்சா துணை மாவட்டத்தின் துன் ரசாக் சாலையில்(Jalan Tun Razak); கோம்பாக் ஆற்றின் மருங்கில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மற்றும் இந்த நிலையத்திற்கு அருகில் தித்திவாங்சா சென்ட்ரல் என்று அழைக்கப்படும் தித்திவாங்சா பேருந்து நிலையமும் உள்ளது.
இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட வழித்தட அமைப்பின், இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1998-இல், இந்த நிலையம் முதன்முதலில் திறக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், தித்திவங்சா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இந்த நிலையத்தை இணைப்பதே முதன்மை நோக்கமாக இருந்தது.
துன் ரசாக் நிலையம்
இஸ்டார் வழித்தட அமைப்பின் 2-ஆம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்குச் சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. தொடருந்து பாதை அமைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் தித்திவங்சா நிலையத்திற்கு துன் ரசாக் நிலையம் என்று பெயரிடப்பட்டது.[2]
முன்னாள் இஸ்டார் வழித்தடத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 1998-இல் திறக்கப்பட்ட இந்த நிலையம், தித்திவாங்சா நகர்ப் பகுதிகள்; மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள்; ஆகியவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதை முதனமை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வசதிகள்
இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து நிலையங்களையும் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன.
பேருந்து சேவை
தித்திவங்சா நிலையத்திற்கு வடக்கே கோம்பாக் ஆற்றுப் பகுதியில், பெக்கெலிலிங் பேருந்து நிலையம் (Pekeliling Bus Station) என்று அழைக்கப்படும் ஒரு பேருந்து மையம் உள்ளது; பேருந்து மையத்தைச் சுற்றிலும் பயணிகளுக்கு நிழல் தரும் கூடங்களும் உள்ளன. இந்த நிலையம் பல உள்ளூர்ப் பேருந்து சேவைகளை வழங்குகிறது. முதன்மையாக, ரேபிட் பேருந்து மற்றும் கோ கேஎல் நகர பேருந்துகள் சேவையில் உள்ளன.
↑Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd. Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.