பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம்
பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Puteri LRT Station; மலாய்: Stesen LRT Bandar Puteri; சீனம்: 公主城轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பண்டார் புத்திரி பூச்சோங் நகர்ப் பகுதியில், பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம்; பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் இந்த நிலையம் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இருப்பினும், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான எல்ஆர்டி நிலையங்களைப் போல அல்லாமல், இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகளுக்குப் பதிலாக ஒரு தீவு நடைமேடை மட்டுமே உள்ளது. பொதுஇந்த நிலையம் 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அம்பாங் மற்றும் செரி-பெட்டாலிங் வழித்தடங்களின் எல்ஆர்டி நீட்டிப்பு திட்டத்தின் (LRT Extension Project) ஒரு பகுதியாகும். இது பூச்சோங்கில் உள்ள மற்ற 3 நிலையங்களுடன் சேர்த்து 2016 மார்ச் 31 அன்று திறக்கப்பட்டது.[5] வரலாறுசெரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களின் நீட்டிப்பு ஆகத்து 29, 2006 அன்று, அப்போதைய மலேசிய துணைப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் அவர்களால் அறிவிக்கப்பட்டது.[6] இதை அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி அவர்கள் 2006-ஆம் ஆண்டு தன் மலேசிய வரவு செலவு திட்ட உரையில் உறுதிப்படுத்தினார்.[7] கட்டுமானம்ரிங்கிட் RM 955.84 மில்லியன் மதிப்புள்ள இந்த நீட்டிப்புத் திட்டம், ஜோர்ஜ் கென்ட் (George Kent Bhd); மற்றும் அதன் கூட்டு அமைப்பான லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd) ஆகியவற்றின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.[8] கட்டுமானம் 2010-இல் தொடங்கியது. அதே நேரத்தில் தொடருந்துகளின், தவறு இல்லாத சோதனை ஓட்டங்கள் 22 சனவரி 2016 அன்று தொடங்கியது. [9] சில தாமதங்களைச் சந்திக்க நேர்ந்தாலும்,[10] நீட்டிப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த நிலையம் மார்ச் 31, 2016 அன்று திறக்கப்பட்டது.[11][12][13] நிலைய நுழைவாயில்கள்
நிலைய அமைப்பு
பேருந்து சேவைகள்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். காட்சியகம்பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2017) மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia