தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம்
தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம் அல்லது தாமான் பாராமவுண்ட் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taman Paramount LRT Station; மலாய்: Stesen LRT Taman Paramount; சீனம்: 百乐花园站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2] இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.[3] அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது. அமைவுதாமான் பாராமவுண்ட் நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 14, 20, 21, 22, SS1-இல் அமைந்துள்ளது; மற்றும் பல தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது. அத்துடன் பிரிவு SS1-க்கு நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. அத்துடன், அருகிலுள்ள தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் ஏறக்குறைய 900 மீட்டர் தொலைவிலும் உள்ளது தாமான் அமான் பொழுதுபோக்கு பூங்கா, கம்போங் துங்கு பள்ளிவாசல், செரி அமான் குடியிருப்புகள்; மற்றும் பாரமவுண்ட் வியூ அடுக்குமாடி வளாகம் போன்றவை அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளாகும். அமைப்புதாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என இரண்டு நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம்கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[4] மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள்பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia