யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் அல்லது யுனிவர்சிட்டி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Universiti LRT Station; மலாய்: Stesen LRT Universiti; சீனம்: 大学站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2] கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்துக் கட்டமைப்பின் முதலாவது கட்டுமானத் திட்டத்தில், பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (Klang Valley Mass Rapid Transit) (MRT System) திட்டத்தின் கீழ் உள்ள எம்ஆர்டி சுற்று வழித்தடத்திற்கு இந்த நிலையம் எதிர்காலப் பரிமாற்ற நிலையமாக அமையும்; மேலும் 2030-ஆம் ஆண்டில் எம்ஆர்டி சுற்று வழித்தடத்தின் கட்டுமானங்கள் நிறைவடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.[3][4] பொதுஇந்த நிலையத்திற்கு அருகிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் கெரிஞ்சி சாலையில், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. 1 செப்டம்பர் 1998-இல் இந்த நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழக நிலையம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்த நிலையத்தின் பெயர் கேஎல் கேட்வே-யுனிவர்சிட்டி என மாற்றப்பட்டது. எனினும், மார்ச் 2022-க்குப் பின்னர் நிலையத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையம், மலாயா பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும், கம்போங் கெரிஞ்சி, தெற்கு பங்சார், பந்தாய் டாலாம் மற்றும் பந்தாய் இல் பார்க் ஆகிய பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[5][6] கிளானா ஜெயா வழித்தடம்கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[7] மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள்
காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia