சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம்
சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம் அல்லது சுபாங் ஆலாம் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Subang Alam LRT Station; மலாய்: Stesen LRT Alam Megah; சீனம்: 梳邦阿南) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3] இந்த நிலையம் சிலாங்கூர், சா ஆலாம், சுபாங் ஆலாம், அரோமா துரோப்பிக்கா (Aroma Tropika) ஆகிய சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது.[4] இந்த நிலையம் ஆலாம் மேகா தேசியப் பள்ளி 2-க்கு (Sekolah Kebangsaan Alam Megah 2) அருகில் அமைந்துள்ளது. அமைவுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. சுபாங் ஆலாம் நிலையம் சா ஆலாம், சுபாங் ஆலாம் பகுதியில் (Subang Alam) அமைந்து இருப்பதால், சுபாங் ஆலாம் எனும் பெயர் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சா ஆலாம் மாநகராட்சிசா ஆலாம் மாநகராட்சி (Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த ஆனையம் 7 திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது. கிளானா ஜெயா வழித்தடம்கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5] ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புஇந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6] பேருந்து சேவைகள்
குறிப்பு: இந்தப் பேருந்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia