கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம்
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Kelana Jaya LRT Station; மலாய்: Stesen LRT Kelana Jaya; சீனம்: 格拉那再也站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2] இந்த நிலையம் பயணிகள் சேவைகளுக்கான முன்னாள் மேற்கு முனையமாக இருந்தது. பின்னர் 1995-ஆம் ஆண்டு, கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் தொடக்க நிலையமாக அமைந்தது. அமைவுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. கிளானா ஜெயா மாநகர்ப் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், மாநகரின் பெயரும் இதற்குச் சூட்டப்பட்டது. இந்த நிலையம், 1108 மற்றும் 1109 சாலைச் சந்திப்புகளுக்கு இடையில்; பெட்டாலிங் ஜெயா உத்தாராபெட்டாலிங் ஜெயா SS2, கிளானா ஜெயாவின் SS4; SS5; தாமான் மாயாங் SS25 ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.[3] ஒரு பெரிய அதிவேக விரைவுச்சாலைக்கு அருகில் இந்த நிலையம் இருப்பதால், பெட்டாலிங் ஜெயா உத்தாரா (PJ Utara - PJU) எனும் வடக்கு பெட்டாலிங் ஜெயா, திராப்பிகானா, சுபாங் ஜெயா, சன்வே மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளுக்குப் பயணிகளைக் கொண்டு செல்லும் பேருந்து இணைப்புகளால் இந்த நிலையம் நன்கு சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம், உள்ளூர் வாடகை வாகனங்களின் நிறுத்த மையமாகவும் செயல்படுகிறது. கிளானா ஜெயா பேருந்து நிறுத்தம்கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம், பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும்; கோலாலம்பூருக்கான விரைவுப் பேருந்து மையமாகவும் உள்ளது. இந்த நோக்கத்திற்காக, வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக கோலாலம்பூர் கிள்ளான் விரைவுச்சாலைக்கு எதிரே ஒரு பெரிய பேருந்து நிறுத்தமும் கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தம் ஒரு பாதசாரி மேம்பாலம் மூலமாக நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் நிலையத்திலிருந்து தெற்குப் பாதையில் புறப்படுகின்றன. ஆனால் பல பேருந்துகள் தங்கள் பயணிகளை பேருந்து நிறுத்தத்திலயே இறக்கிவிடுகின்றன. ஏனெனில் இந்தச் செயல்பாடு, பேருந்து முனையத்தில் நெரிசலைத் தவிர்க்கிறது. அத்துடன் இந்த நிலையம் பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையத்திற்கும் பேருந்துச் சேவைகளை வழங்குகிறது. கிளானா ஜெயா வழித்தட வரைபடம்![]() நிலைய தள அமைப்பு
கிளானா ஜெயா வழித்தடம்கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[4] மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. அமைப்புதொடருந்துகள் பயணிக்கும் தடத்தில் உள்ள பெரிய கூரைகள் பாரம்பரிய மலாய்ப் பண்பாட்டுக் கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டது. கிளானா ஜெயாயா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என மூன்று நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும், பாதசாரிகள் நடைபாதைகளுக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும்; மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் வழங்கப்படுகின்றன. பேருந்து சேவைகள்பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia