கோம்பாக் எல்ஆர்டி நிலையம்
கோம்பாக் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Gombak LRT Station; மலாய்: Stesen LRT Gombak; சீனம்: 鹅唛) என்பது மலேசியா, சிலாங்கூர் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். முன்பு தெர்மினல் புத்ரா என்று அழைக்கப்பட்ட இந்த நிலையம் கிளானா ஜெயா வழித்தடத்தின் வடக்கு முனையமாக உள்ளது.[2][3] இந்த நிலையத்தில் கெந்திங் மலை பேருந்துகளுக்கான பயணச்சீட்டு வழங்குமிடம் உள்ளது. ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை கெந்திங் இஸ்கைவே நிலையத்திற்கு பேருந்துகள் புறப்படும். இந்தப் பேருந்துகளை ரிசோர்ட்ஸ் ஓர்ல்ட் (Resorts World Berhad) எனும் நிறுவனம் இயக்குகிறது.[4]. பொதுகோலாலம்பூரில் வசிப்பவர்கள், குறிப்பாக செதாபாக் பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள், கெந்திங் மலைக்குச் செல்லும்போது, இந்த நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இணைப்புகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia