முகிபா எல்ஆர்டி நிலையம்
முகிபா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Muhibbah LRT Station; மலாய்: Stesen LRT Muhibbah; சீனம்: 轻轨穆希巴站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2] கோலாலம்பூர் கம்போங் முகிபா (Kampung Muhibbah) குடியிருப்புப் பகுதியில் உள்ளது. கம்போங் முகிபா என்பது ஒரு கிராமமாகும். கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது. முகிபா எல்ஆர்டி நிலையம், கம்போங் முகிபா மற்றும் பார்க்லேன் ஓயூஜி அடுக்குமாடி வீடுகளுக்கு (Parklane OUG Service Apartments) அருகில் 1.0 கி.மீ. நடை தூரத்தில் உள்ள நிலையமாகும்.[3][4] பொதுமுகிபா நிலையத்திலிருந்து அடுத்த நிலையமான அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு நடந்து செல்ல முடியும். அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் மிக அருகில் உள்ள நிலையமாக அறியப்படுகிறது.[5] கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த முகிபா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அமைவுஇந்த நிலையத்திற்கு முன்னதாக SP21 ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையமும் உள்ளன. பேருந்து சேவைகள்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். அமைப்பு
காட்சியகம்முகிபா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia