புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை
புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 217 (மலேசியா) (ஆங்கிலம்: Bukit Jalil Highway அல்லது Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். கட்டணமில்லா நெடுஞ்சாலையான இந்தச் சாலை பொதுஇந்த நெடுஞ்சாலை கின்ராரா மற்றும் புக்கிட் ஜாலில் நகரங்களைக் கடந்து செல்கிறது.[1] புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாறுஇந்தப் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலை, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது (1998 Commonwealth Games), சா ஆலாம் விரைவுச் சாலைக்கு அடுத்த நிலையில், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு வளாகத்திற்குச் செல்லும் இரண்டாவது முக்கிய நெடுஞ்சாலையாக மாறியது. 2004-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை கூட்டரசு சாலை 217 (மலேசியா) என்று மலேசிய அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. வேக வரம்பு 90 கி.மீ. வரை அனுமதிக்கப் படுகிறது. மேலும் காண்கமேற்கோள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia