பராக் பள்ளத்தாக்கு![]() ![]() பராக் பள்ளத்தாக்கு (Barak Valley), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தெற்கில் மலைகளால் சூழப்பெற்றுள்ளது. இப்பகுதியில் பராக் ஆறு பாய்வதால் இதற்கு பராக் பள்ளத்தாக்கு எனப்பெயராயிற்று. மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டத்தில் அமைந்த பராக் பள்ளத்தாக்கில் அசாமின் கசார் மாவட்டம், கரீம்கஞ்சு மாவட்டம், ஹைலாகண்டி மாவட்டம் உள்ளது. பராக் பள்ளத்தாக்கின் பெரிய நகரம் சில்சார் ஆகும். [1] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பராக் பள்ளத்தாக்கின் மக்கள் தொகை 36,24,599 ஆகும். மொழிகள்பராக் பள்ளத்தாக்கில் பேசப்படும் மொழிகள் (2011)[2] வங்காள மொழி (80.84%) இந்தி மொழி (10%) மணிப்புரியம் (3.49%) பிஷ்ணுப்ரியா மணிப்புரீ மொழி (1.38%) திமசா மொழி (0.6%) திரிபுரா மொழிகள் (0.59%) ஒடிய மொழி (0.53%) நேபாளி மொழி (0.14%) பிற மொழிகள் (2.43%)
சமயங்கள்பராக் பள்ளத்தாக்கின் சமயங்கள்(2011)[3] இந்து சமயம் (50%) இசுலாம் (48.1%) கிறித்தவம் (1.6%) பிற (0.3%)
மாவட்ட தலைமையிட நகரங்களின் மக்கள் தொகை
பொருளாதாரம்பராக் பள்ளத்தாக்கில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளது. காடுகள்![]() பராக் பள்ளத்தாக்கின் காடுகளில் 104 வீடுகள் உள்ளது.[5]இப்பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்களில் கசார் மாவட்டத்தில் 2,222 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும்; ஹைலாகண்டி மாவட்டத்தில் 774.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும்;கரீம்கஞ்சு மாவட்டத்தில் 851.43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளும் உள்ளது.[6] ![]() தட்ப வெப்பம்பராக் பள்ளத்தாக்கின் சராசரி வெப்பம் 35° முதல் 40 °C வரை இருக்கும். ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 100 முதல் 200 செண்டி மீட்டர் வரை உள்ளது.[7] மக்களவை தொகுதிகள்இதனையும் காண்கமேற்கோள்கள்
ஊசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia