பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி
பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya Federal Constituency; சீனம்: 八打灵再也国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P105) ஆகும். பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1986-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் 1986-ஆம் ஆண்டில் இருந்து பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பெட்டாலிங் ஜெயா மாநகரம்பெட்டாலிங் ஜெயா மாநகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கிழக்குப் பகுதியில் கோலாலம்பூர்; வடக்குப் பகுதியில் சுங்கை பூலோ, மேற்குப் பகுதியில் சிலாங்கூரின் தலைநகரமான சா ஆலாம், மற்றும் சுபாங் ஜெயா, தெற்குப் பகுதியில் கின்ராரா, பூச்சோங் ஆகிய பெரும் நகர்ப் பகுதிகள் உள்ளன. இந்த மாநகரத்தின் பரப்பளவு 97.2 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி இங்கு 902,086 பேர் வசிக்கின்றனர். பெட்டாலிங் ஜெயா நகருக்கு 2006 சூன் 20-ஆம் தேதி மாநகர்த் தகுதி (City Status) வழங்கப்பட்டது. பெட்டாலிங் மாவட்டம்![]() பெட்டாலிங் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள். பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி
பெட்டாலிங் ஜெயா மக்களவை தேர்தல் முடிவுகள்
பெட்டாலிங் ஜெயா மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia