கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்
கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் (Krasnoyarsk Krai (ரஷ்யம்: Красноя́рский край , tr. Krasnoyarsky kray; IPA: [krəsnɐˈjarskʲɪj ˈkraj]) என்பது உருசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசம் (கிராய்) ஆகும், இதன் தலைநகரம் சைபீரிய நகரமான கிராஸ்னயார்ஸ்க் ஆகும். இந்நகரம் சைபீரியாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். கிராஸ்னயார்ஸ்க் பிரதேசமே உருசிய கூட்டமைப்புகளில் பெரிய கிராய் மற்றும் கூட்டமைப்பின் இரண்டாவது பெரிய பகுதியாகும். மேலும் உலகில் பரப்பளவில் மூன்றாவது பெரிய துணை தேசிய ஆட்சிப் பிரிவு ஆகும். இந்தப் பிரதேசத்தின் பரப்பளவு 2,339,700 சதுர கிலோமீட்டர் (903,400 சதுர கி. மைல்), ஆகும், இது ஏறக்குறைய கனடா நாட்டின் மொத்தப்பரப்பளவில் கால் பங்குக்கு இணையானது ( பரப்பளவில் கனடா உலகில் உருசியாவுக்கு அடுத்த பெரிய நாடு), இது மொத்த உருசிய கூட்டமைப்பின் நிலப்பரப்பில் 13% ஐ கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 2,828,187 ஆகும், இது உருசிய கூட்டமைப்பின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமே ஆகும். (2010 கணக்கெடுப்பு).[7] நிலவியல்இந்தக் கிராய் சைபீரியாவின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் இது சைபீரிய கூட்டமைப்பு மாவட்டத்தின் பரப்பளவில் பாதியைக் கொண்டுள்ளது. மேலும் இது தெற்கில் சயான் மலைகளில் இருந்து யெனிசில் ஆற்றின் ஊடாக வடக்கில் தமையூர் தீபகற்பம்வரை 3,000 கி. மீ; இதன் எல்லைகளாக (கடிகாரச் சுற்றில்) சகா குடியரசு, இர்கூத்சுக் மாகாணம், துவா குடியரசு, அக்காசியா, கெமராவோ மாகாணம், தோம்சுக் மாகாணம், தியூமென் மாகாணம் ஆகியவையும், வடக்கில் ஆர்டிக் பெருங்கடலின் கரா கடல் மற்றும் லாப்டிவ் கடல் ஆகியன உள்ளன. இந்தக் கிராய் ஆர்க்டிக் பெருங்கடல் படுக்கையில் உள்ளது; கிராய் பகுதியில் மிகுதியான எண்ணிக்கையிலான ஆறுகள் வழிந்தோடுகின்றன. இதில் முதன்மையான ஆறுகள் எனிசி மற்றும் அதன் துணை ஆறுகளாகும் (தெற்கிலிருந்து வடக்காக). இங்கு ஆயிரக் கணக்கான ஏரிகள் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள ஏரிகளிலும் ஆறுகளிலும் மீன்வளம் மிகுந்து காணப்படுகிறன. இந்த பகுதியின் காலநிலை ஆண்டு வெப்பநிலையில் கடுமையான வேறுபாடுகளைக் கொண்டதாக பிராந்தியத்தின் பெரும்பாலான மக்கள் நடு மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே மிகுதியாக வாழ்கின்றனர். இங்கு நீண்ட குளிர் மற்றும் குறுகிய கோடைக் காலம் நிலவுகிறது. க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசத்தில் மூன்று காலநிலை வட்டாரங்கள் உள்ளன, வட பகுதியில், குறைந்தது 40 நாட்களுக்கு 10 ° செ (50 ° பா) வரை மிகுதியான வெப்ப நிலை இருக்கும். தெற்கில் 110-120 நாட்கள் இவ்வெப்ப நிலை உள்ளது. சனவரி மாத சராசரி வெப்பநிலை வடக்கில் −36 °C (−33 °F) வரையிலும், தெற்கில் −18 °C (0 °F) வரை இருக்கும். சூலை மாத சராசரி வெப்பநிலை வடக்கில் +10 °C (50 °F) வரையிலும், தெற்கில் +20 °C (68 °F) வரையிலும் இருக்கும். ஆண்டு சராசரி மழையளவு 316 மில்லிமீட்டர்கள் (12.4 அங்) (up to 1,200 மில்லிமீட்டர்கள் (47 அங்) சயான் மலையடிவாரத்தில் ). பிராந்தியத்தின் மையப் பகுதியில் நவம்பர் துவக்கத்திலிருந்து மார்ச் இறுதிவரை பனிப்பொழிவு நிலவும். சயான் மலை முகடுகளில் 2,400 –2,600 மீ உயரத்திலும் மற்றும் புடோரானா பீடபூமி பகுதியின் 1,000–1,300 மீ வரை உயரமான பகுதிகளில் பனி நிரந்தரமாக முடியபடி இருக்கும். பிராந்தியத்தின் உயரமான பகுதியாக கிழக்கு சயான் மலைகளில் உள்ள கிராண்டியோசினி முகடு 2,922 மீட்டர்கள் (9,587 அடி) ஆகும். வரலாறுதொல்லியல் ஆய்வுகளின் மூலம் இப்பகுதியில் கி.மு.40,000 காலகட்டத்தில் மனிதர்கள் குடியேறியதாக அறியப்படுகிறது.[12] சித்தியர்களின் கி.மு 7 ஆம் நூற்றாண்டு கால கல்லறை - நினைவுச் சின்னங்கள் க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசத்தில் கிடைத்துள்ளன. இவை யூரேசியாவின் பழங்கால சின்னங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் உருசிய குடியேற்றமானது (பெரும்பாலும் கோசாக்குகள்) 17 ஆம் நூற்றாண்டில் துவங்கியது. டிரான்ஸ் சைபீரியன் ரயில்பாதை கட்டுமானத்துக்குப் பிறகு குடியேற்றம் அதிகரித்தது. பொருளாதாரம்பிராந்தியத்தில் 95% மேற்பட்ட நகரங்கள், பெரும்பாலான தொழிற்சாலைகள், மக்கள், மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் என அனைத்தும் தெற்கு பிரதேசத்தில் இயங்கி வருகின்றன. இயற்கை வளம்இந்த கிராய் உருசிய பிராந்தியங்களில் மிகுதியான இயற்கை வளம் மொண்டதாக உள்ளது. நாட்டின் என்பது விழுக்காடு நிக்கல், 75% கோபால்ட், 70% செம்பு, 16% நிலக்கரி, 10% தங்கம் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது. இப்பிராந்தியம் நாட்டின் மர மூலப் பொருட்களில் 20% ஐ உற்பத்தி செய்கிறது. உருசியாவின் 95% பிளாட்டின வளம் இப்பிராந்தியத்தில் குவிந்துள்ளது. மக்கள் வகைப்பாடுமக்கள் தொகை (முன்னாள் தைமைர் சுயாட்சி மாகாணம் மற்றும் இவின்க் சுயாட்சி மாகாணம் உட்பட ): 2,828,187 (2010 கணக்கெடுப்பு);[7] இனக்குழுக்கள்: இப்பிரதேசத்தின் பெரிய இனக்குழு உருசியர்கள் ஆவர், மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த பிற இன மக்களும் உள்ளனர். சைபீரிய மக்கள் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் உள்ளனர். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி பின்வருமாறு இனக் குழுக்களின் விகிதம்:[7]
2009 ஆகத்து கணக்கெடுப்பில் கிராஸ்னயார்ஸ்க் பிராந்தியத்தில் 16 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகையில் இயற்கையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.[15] மொத்த கருத்தரிப்பு விகிதம்:[16][17] 2003 - 1,35 | 2004 - 1,35 | 2005 - 1,31 | 2006 - 1,33 | 2007 - 1,44 | 2008 - 1,55 | 2009 - 1,61 | 2010 - 1,64 | 2011 - 1,64 | 2012 - 1,75 | 2013 - 1,78 | 2014 - 1,81 | 2015 - 1,83(e)
சமயம்2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[19] மக்கள் தொகையில் 29.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபையினர், 5% பேர் நான்டிமோனோமின்னோடினல் திருச்சபையினர் (புரோட்டஸ்டண்ட் திருச்சபையைத் தவிர்த்து), 2% கிழக்கு மரபுவழி கிருத்தவர்கள், அல்லது வேறு திருச்சபைகளில் நம்பிக்கை அற்றவர்கள் ( உருசியர் அல்லாதவர்கள்) 1.5% பேர் முஸ்லிம், 1% பேர் ஸ்லாவிக் நாட்டுப்புற சமயத்தவர்கள், 10.9% பேர் சமயம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காதவர்கள், 35% சமய நம்பிக்கை அற்றவர்கள் 15% பேர் நாத்திகர்.[19] மேற்கோள்கள்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia