பிரகாஷ் சிங் பாதல்
பிரகாஷ் சிங் பாதல் (ஆகஸ்ட் 12 1927 - ஏப்ரல் 25 2023[1][2]) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பஞ்சாபின் பரிதாகோட் மாவட்டத்திலுள்ள அபுல் குரானா என்ற கிராமத்தில் சர்தார் ரகுராஜ் சிங்குக்கும், சுந்திரிக்கும் மகனாக பிறந்தார். சுரிந்தர் கௌர் இவரது மனைவியாவார்.[3] 1947ல் அரசியலில் நுழைந்த பாதல் 9 ஆவது முறையாகச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லம்பி தொதியில் அகாலி தளம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற [4] இவர் 2007 மார்ச் 1 முதல் 16 மார்ச் 2017 வரை பஞ்சாபின் முதலமைச்சராக இருந்தார். இதற்கு முன் மூன்று (1970-71, 1977-80, 1997-2002) முறை முதல்வராக இருந்துள்ளார். மூன்று முறை (1972, 1980, 2002) பஞ்சாப் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசில் விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவருடைய மகன் சுக்பீர் சிங் பாதல் தற்போது மக்களவை உறுப்பினராகவும், அகாலி தளத்தின் தலைவராகவும் உள்ளார். இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருது 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் அன்று பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia