விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி (Vikravandi Assembly constituency), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள், காணை ஊராட்சி ஒன்றியத்தின் 45 ஊராட்சிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியை உள்ளடக்கியுள்ளன. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 2,33,901 அதில் ஆண்: 1,15,608, பெண்: 11,8,,268 மற்றும் மூன்றாம் பாலினம்: 25 ஆவர். அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்லவன், திமுக சார்பில் புகழேந்தி, அமமுக சார்பில் ஆர். அய்யனார், ஐஜேகே சார்பில் ஆர். செந்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெ. சீபா ஆஸ்மி வேட்பாளர்களாக உள்ளனர்.[2][3] தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்விழுப்புரம் வட்டம் (பகுதி) நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, சின்னப்பநாயக்கன்பாளையம், பனமலை, சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், செஞ்சி, குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை (விக்கரவாண்டி), குத்தாம்பூண்டி, மேல் கொண்டை, ஆசூர், வேம்பி, கஞ்சனூர், வேலியந்தல், பூண்டி, ஒலகலாம்பூண்டி, பூங்குணம், குண்டலப்புலியூர், குன்னத்தூர், தாங்கல் (1), சிறுவாலை, செம்மேடு, கக்கனூர், அரியலூர், திருக்கை, வீரமூர், அரும்புலி, ஆதனூர், கஸ்பாகாரணை, தும்பூர், கொட்டியாம்பூண்டி, சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், பிள்ளையார்குப்பம், கயத்தூர், வெட்டுக்காடு, தொரவி, பணப்பாக்கம் பாப்பனப்பட்டு, ஒரத்தூர், சூரப்பட்டு, வாழப்பட்டு, கெடார், பள்ளியந்தூர், கோளிப்பட்டு, மல்லிகாபட்டு, காங்கியனூர், அகரம், சித்தாமூர், வெங்கந்தூர், அசரக்குப்பம், சொழகனூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம், பனையபுரம், இராதாபுரம், மதுரப்பாக்கம், செய்யாத்துவிண்ணான், சிறுவள்ளிக்குப்பம், கப்பியாம்புலியூர், வடகுச்சிப்பாளையம், திருவாமாத்தூர், சோழாம்பூண்டி, அரியூர், குப்பம், மாம்பழப்பட்டு, கல்பட்டு, சிறுவாக்கூர், கருங்காலிப்பட்டு, காணை, வைலாமூர், எடப்பாளையம், ஆலாத்தூர், வீராட்டிக்குப்பம், விழுப்புரம், வாக்கூர், பகண்டை, தென்னவராயம்பட்டு மற்றும் மூங்கில்பட்டு கிராமங்கள், விக்கிரவாண்டி (பேரூராட்சி)[4]. வெற்றி பெற்றவர்கள்
பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia