இலாவாசு வானூர்தி நிலையம்
இலாவாசு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LWY, ஐசிஏஓ: WBGW); (ஆங்கிலம்: Lawas Airport; மலாய்: Lapangan Terbang Lawas) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் இலிம்பாங் பிரிவு, இலாவாசு நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சபா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.[3] இந்த வானூர்தி நிலையம் இலாவாசு நகரம்; இலாவாசு மாவட்டம்; இலிம்பாங் பிரிவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வானூர்திப் போக்குவரத்தை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. பொதுசரவாக் மாநிலத் தலைநகரான கூச்சிங்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் இந்த வானூர்தி நிலையம் உள்ளது. சரவாக், சபா மற்றும் புரூணை நிலப் பகுதிகளுக்கு இடையே அமைந்து இருப்பதால் ஒரு சிறப்பான போக்குவரத்து மையமாகவும் திகழ்கின்றது. தற்போது உள்ள வானூர்தி நிலையத்தைப் புதிய இடத்திற்கு மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய தளம் பாதுகாப்பற்றதாகக் கருதப் படுகிறது. வானூர்தி நிலையம் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆற்றங்கரையில் சில நில அரிப்புகள் காணப்பட்டன. இந்தப் புதிய விமான நிலையம், மாஸ் விங்சு மூலம் இயக்கப்படும் ATR 72-500 ரக விமானங்கள் பயன்படுத்த இடமளிக்கும். புதிய விமான நிலையத்தை இலாவாசில் உள்ள மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சரவாக் சபா எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்துவார்கள். லாவாசு நகரம்காடுகளில் உள்ள காட்டு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வதும்; விவசாயமும் தான், இந்த நகரின் முக்கியமான பொருளாதார ஆதாரங்கள். பாகெலாலான் (Ba'Kelalan) எனப்படும், இலாவாசு மேட்டு நிலப் பகுதிகளில் ஆப்பிள் சாகுபடி பரிசோதனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆப்பிள் அறுவடை செய்கிறார்கள். இலாவாசு நகரத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மாநில அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளன. இலாவாசு பகுதியில் நெல் சாகுபடி நிலத்தின் பெரும்பகுதி செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டு உள்ளன. சேவை
சம்பவங்கள் மற்றும் விபத்துகள்
வானூர்திப் பயண எண் 3516 கொண்ட அந்த வானூர்தி மிரியில் இருந்து லாவாஸுக்கு உள்நாட்டுச் சேவையில் ஈடுபட்டு இருந்தது. ஓடுபாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையின் வலதுபுறம் திரும்பி அதன் மூக்குச் சக்கரம் உடைந்தது.[5] லாவாசு வானூர்தி நிலையத்தின் உட்பகுதிகாட்சியகம்இலாவாசு வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்: மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia