டாமன்சாரா மக்களவைத் தொகுதி
டாமன்சாரா மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Damansara; ஆங்கிலம்: Damansara Federal Constituency; சீனம்: 白沙罗国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P106) ஆகும். டாமன்சாரா மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் 1959-ஆம் ஆண்டில் இருந்து டாமன்சாரா மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. டாமன்சாரா நகரம்பெட்டாலிங் ஜெயா மாநகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பெட்டாலிங் ஜெயா பெருநகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகவும் டாமன்சாரா நகரம் விளங்குகிறது. இந்த நகரத்திற்கு அருகில் ஓடும் டாமன்சாரா நதியின் (Sungai Damansara) பெயரால் இந்தப் புறநகர்ப் பகுதி அழைக்கப் படுகிறது.[5] 1974-க்கு முன்னர், டாமன்சாரா என்பது ஒரு முக்கிம். கிள்ளான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக இருந்தது. சிலாங்கூர் மாநிலத் தலைநகர் சா ஆலாம், சுபாங் ஜெயா, பண்டார் சன்வே, கிளானா ஜெயா, கோத்தா கெமுனிங், புத்ரா அயிட்ஸ் போன்ற பகுதிகள், முன்னர் காலத்தில் டாமன்சாரா துணை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. இன்றைய நிலையில், டாமன்சாராவின் எல்லை வரையறை பெரிய அளவில் பரந்து விரிந்து உள்ளது. பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வடக்குப் புறநகர்ப் பகுதி; கெப்போங், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதிகள்; மற்றும் கிழக்கில் சிகாம்புட் புறநகர்ப் பகுதி; தெற்கில் கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி போன்ற பல புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.[6] பெட்டாலிங் மாவட்டம்![]() பெட்டாலிங் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள். பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
டாமன்சாரா மக்களவை தொகுதி
டாமன்சாரா மக்களவை தேர்தல் முடிவுகள்
டாமன்சாரா மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia