பெர்னார்ட் கிலுக் தும்போக்
பெர்னார்ட் கிலுக் தும்போக் (ஆங்கிலம்; Bernard Giluk Dompok; மலாய்: Tan Sri Datuk Seri Panglima Bernard Giluk Dompok) (பிறப்பு: 7 அக்டோபர் 1949) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவரின் பதவிகள்:
பொதுபெர்னார்ட் கிலுக் தும்போக், சபாவின் பெனாம்பாங்கில் பிறந்தார். அவர் தன் தொடக்கக் கல்வியை பெனாம்பாங் செயின்ட் மைக்கேல் பள்ளி; மற்றும் கோத்தா கினபாலு தஞ்சோங் அரு லா சாலே மேல்நிலைப் பள்ளி; ஆகிய பள்ளிகளில் பெற்றார். பின்னர் அவர் 1978-இல், ஐக்கிய இராச்சியத்தின் வெசுட்காம் தொழில்நுட்ப நிறுவனத்தில் (இப்போது கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்), இளங்கலை பட்டம் பெற்றார்.[3] அவர் 1978-இல், சபா மாநில நிலங்கள் மற்றும் நில அளவைத் துறையில் மதிப்பீட்டாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் பொதுத் துறையை விட்டு வெளியேறி 1980 முதல் 1985 வரை சுமார் ஐந்து ஆண்டுகள் தனியார் மதிப்பீட்டாளராகப் பணியாற்றினார். அரசியல் வாழ்க்கைஆரம்பத்தில் ஐக்கிய சபா கட்சியின் (PBS) உறுப்பினராக இருந்த பெர்னார்ட் கிலுக் தும்போக், சபா மாநில சட்டமன்றத் தொகுதியான மோயோக் சட்டமன்றத் தொகுதி; மற்றும் பெனாம்பாங் மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டிலும்; 1986 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1986 மாநிலத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பெர்னார்ட் கிலுக் தும்போக், சபா மாநிலத்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4] 1994-இல், சபா மக்களாட்சி கட்சி (PDS) என முன்பு அறியப்பட்ட கடாசான் மூருட் அமைப்பின் (UPKO} தலைவரானார். அதன் பின்னர், பெர்னார்ட் கிலுக் தும்போக் மற்றும் பலர் ஐக்கிய சபா கட்சியில் (PBS) இருந்து பிரிந்து பாரிசான் நேசனல் (BN) கூட்டணியில் சேர்ந்தனர். பாரிசான் நேசனல் கூட்டணிக்கு மாறிய பிறகு, 1995-ஆம் ஆண்டு மலேசியப் தேர்தலில் அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.[4] சபா முதலமைச்சர் பதவிபெர்னார்ட் கிலுக் தும்போக், தன் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த போதிலும், மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில பாரிசான் நேசனல் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். 1998 முதல் 1999 வரை சுழற்சி அடிப்படையில், சபா முதலமைச்சர் பதவியை ஏற்கும் முன், சபா மாநில அரசாங்கத்தின் பல அமைச்சுகளில் பணியாற்றினார். 1999-இல் அவர் கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதியில், ஐக்கிய சபா கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2004-இல் மலேசிய அமைச்சரவையில் பிரதமர் துறை அமைச்சராக இணைந்து 2008-இல், மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் அமைச்சரானார். 2013 மலேசியப் பொதுத் தேர்தலில், மக்கள் நீதிக் கட்சியின் (PKR) டேரல் லீக்கிங் (Darell Leiking) என்பவரிடம் தன் கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதியை இழந்தபோது, அவரின் நாடாளுமன்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.[5] பொதுத்தேர்தல் முடிவுகள்
விருதுகள்மலேசிய விருதுகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia