அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை
அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை (Alor Gajah-Central Malacca-Jasin Highway (AMJ), (மலாய் மொழி: Lebuhraya Alor Gajah-Melaka Tengah-Jasin) என்பது மலாக்கா மாநிலத்தின் ஊடாகச் செல்லும் நெடுஞ்சாலை ஆகும்.[1] மலாக்கா பகுதியில் மலாக்கா பகுதியில், முன்பு மாலிம் நகரில் இருந்து செமாபோக் வரையில் இருந்த கூட்டரசு சாலை மலாக்கா மூவார் சாலைஅலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை, முதலில் சிம்பாங் அம்பாட்டில் இருந்து மலாக்கா மாநகரத்திற்கு வடக்கு தெற்காகச் செல்கிறது. அடுத்து, மலாக்கா மாநகரத்தில் இருந்து மேற்கு கிழக்கு திசையில் மூவார் நகருக்குச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மலாக்கா பகுதி, கூட்டரசு சாலை செலவு 505 மில்லியன் ரிங்கிட்மலாக்கா - சிம்பாங் அம்பாட் கூட்டரசு சாலை 19, மலாக்கா - மூவார் கூட்டரசு சாலை 5 ; இந்தச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நெடுஞ்சாலை திட்டம் 2007-ஆம் ஆண்டு முடிவுற்றது. 505 மில்லியன் ரிங்கிட் செலவானது. 2007 ஜூன் 27-ஆம் தேதி, போக்குவரத்திற்கு திறந்துவிடப் பட்டது.[1] இந்த அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலையில் மூன்று சந்திப்புகள் உள்ளன.
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia