சிலாங்கூர்
சிலாங்கூர், (மலாய்:Selangor), மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் இசான' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' என்னும் அரபு மொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம்; தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது. ஆகத் தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருந்தன.(சிலாங்கூர் மாநில வரைபடத்தைப் பார்க்கவும்.). சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக சா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான்.[5] மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாக பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது. மலேசியாவிலேயே மிகவும் பணக்கார மாநிலமாகவும், மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் சிலாங்கூர் மாநிலம் புகழ் பெற்று விளங்குகின்றது.[6] கிள்ளான் பள்ளத்தாக்கு நவீன மயமாகி வருவதால், சிலாங்கூர் மாநிலம் மிகத் துரிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், போக்குவரத்து வசதிகளும் மிகச் சிறப்பான உள்கட்டமைப்புகள் கொண்டவை. மலேசியாவிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் சிலாங்கூரில், மக்களின் வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. சொல்லியல்![]() ![]() ![]() ![]() ![]() ![]() சிலாங்கூர் எனும் சொல்லின் தோற்றத்தைப் பற்றிய விவரங்கள் வரலாற்றில் அதிகமாகத் தெரியவில்லை. ஆனால், ‘சிலாங்காவ்’ எனும் சொல்லிலிருந்து சிலாங்கூர் எனும் சொல் வந்திருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். ‘சிலாங்காவ்’ (மலாய்: Selangau), என்பது ஒரு வகையான பூச்சியைக் குறிப்பதாகும். சிலாங்கூர் ஆற்றின் வட மேற்குப் பகுதிகளில் இந்தப் பூச்சியினம் அதிகமாகக் காணப்படுகின்றது. ‘சிலாங்’ (மலாய்: Selang), ‘ஊர்’ எனும் சொற்களில் இருந்து சிலாங்கூர் எனும் சொல் வந்து இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். ‘சிலாங்’ என்பது மலாய்ச் சொல். ‘ஊர்’ என்பது தமிழ்ச் சொல். ‘சிலாங்’ என்றால் நீரிணை. ‘ஊர்’ என்றால் ஒரு நிலப்பகுதி. இதைத் தவிர, இன்னும் ஒரு நியாயமான சொல்லியல் நியதியும் இருக்கின்றது. மூங்கில் காடுகள்’சிலா’ ‘ங்கோர்’ (மலாய்: Sela), (மலாய்: ngor) எனும் இரு மலாய்ச் சொற்களில் இருந்தும் சிலாங்கூர் எனும் சொல் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ‘சிலா’ எனும் சொல் ஒரு நில இடுக்கைக் குறிப்பதாகும். ‘ங்கோர்’ எனும் சொல் மூங்கிலைக் குறிப்பதாகும். முன்பு காலத்தில் சிலாங்கூர் ஆற்றின் கரையோரங்களில் நிறைய மூங்கில் காடுகள் இருந்தன. அதனால், அப்படியும் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்கின்றார்கள். 1301 லிருந்து 1400 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்த ஸ்ரீ பாதுக்கா மகாராஜா என்பவர் சிலாங்கூரை ஆட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சியில் சிலாங்கூர் சமர்லிங்கா ([[மலாய் மொழி: Samarlinga) என்று அழைக்கப்பட்டது. சீனத் தளபதி செங் ஹோ 1400-களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் தன்னுடைய பயணக் குறிப்புகளில் கிள்ளான் ஆறு, சிலாங்கூர் டாராட் (Selangor Darat) எனும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[7] வரலாறு15ஆம் நூற்றாண்டில் சிலாங்கூர் மாநிலத்தை மலாக்கா சுல்தானகம் ஆட்சி செய்து வந்தது. 1511-இல் போர்த்துகீசியர்களிடம் மலாக்கா வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர், மலாக்காவையும் அதைச் சார்ந்த நிலப்பகுதிகளையும் ஆட்சி செய்வதற்கு ஜொகூர் அரசு, அச்சே அரசு, சயாமிய அரசு, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், போன்றவர்கள் போட்டி போட்டனர். பூகிஸ்காரர்கள் வருகைஇந்தக் கட்டத்தில் சிலாங்கூரின் பல பகுதிகளில் ஈயம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.[8] இதுவும் சிலாங்கூரைக் கைப்பற்றுவதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. 1641-இல் போர்த்துகீசியர்களிடமிருந்து மலாக்காவை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர். அவர்கள் சுலாவாசித் தீவிலிருந்து பூகிஸ் மக்களைச் சிலாங்கூருக்கு கொண்டு வந்தனர். இந்தப் பூகிஸ்காரர்கள் தான் இப்போதைய சிலாங்கூர் சுல்தானகத்தை அமைத்தவர்கள் ஆகும். அப்போது சிலாங்கூரின் முதல் தலைநகரமாகக் கோலா சிலாங்கூர் இருந்தது. 1766-இல் கோலா சிலாங்கூர் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் மினாங்கபாவு இனத்தவர் இருந்தனர். பூகிஸ்காரர்களின் வருகையால் மினாங்கபாவு மக்கள், நெகிரி செம்பிலான் மாநிலப் பகுதிகளுக்குப் புறம் தள்ளப்பட்டனர். மினாங்கபாவு மக்கள், இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிலிருந்து குடியேறியவர்கள். அவர்கள் சிலாங்கூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்திலிருந்து வந்தனர். இரகசிய கும்பல்கள்- 19ஆம் நூற்றாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. ரப்பர் உற்பத்தியில் உயர்வு, பெருமளவில் ஈயக் கனிவள இருப்பு போன்றவை சிலாங்கூர் மாநிலத்தின் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. இருப்புகள் சீனர்களை அதிகமாகக் கவர்ந்தன. ஆயிரக்கணக்கான சீனர்கள் சீனாவிலிருந்து குடியேறினர். இவர்கள் சிலாங்கூரில் தங்களுக்குள் இரகசிய கும்பல்களை உருவாக்கிக் கொண்டனர். சிலாங்கூரின் நிலப்பகுதிகளின் பிரபுகளாக இருந்தவர்களுடன் இணைந்து கொண்ட இரகசிய கும்பல்கள் ஈயச் சுரங்கங்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சமூக, பொருளாதாரப் பேரழிவுகள்இந்த ரகசிய கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபட்டு சிலாங்கூரில் சமூக, பொருளாதாரப் பேரழிவுகளை ஏற்படுத்தின. இது பிரித்தானியர்களின் அடக்கி ஆளும் தன்மைக்கு வழிகோலியது. பிரித்தானியர்கள் அந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதன் விளைவாக 1874-இல் சிலாங்கூர் சுல்தான் ஒரு பிரித்தானிய ஆளுநரை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது. பிரித்தானியர்கள் உருவாக்கிய ஒரு நிலைத்தன்மையினால் சிலாங்கூர் மீண்டும் வளம் பெற்றது. 1896-இல் பிராங்க் சுவெட்டன்காம் என்பவர் சிலாங்கூரின் பிரித்தானிய ஆளுநராக இருந்தார். அவர் சிலாங்கூரை மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பில் (ஆங்கிலம்: Federated Malay States) இணைத்தார். அந்த அமைப்பில் ஏற்கனவே நெகிரி செம்பிலான், பேராக், பகாங் மாநிலங்கள் உறுப்பியம் பெற்று இருந்தன. அந்த அமைப்பின் தலைநகரம் கோலாலம்பூரில் இருந்தது. கோலாலம்பூரை சிலாங்கூர் தாரை வார்த்ததுமலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு 1948 -இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் உருவாக்கம் பெற்றது. 1957 -இல் மலேசியா [[மலேசிய விடுதலை|சுதந்திரம் பெற்று 1963 -இல் மலேசியா எனும் புதுப்பெயர் பெற்றது. அந்தக் கட்டத்தில் கோலாலம்பூர் மாநகரம் மலேசியாவிற்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் ஒரே தலைநகரமாக விளங்கியது. 1974 -இல் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்திற்கு சிலாங்கூர் மாநிலம் கோலாலம்பூரை ஒரு கூட்டரசு பிரதேசமாகத் தாரை வார்த்துக் கொடுத்தது. தன்னுடைய அன்புக்கு பாத்திரமான கோலாலம்பூரை கையெழுத்திட்டு எழுதிக் கொடுக்கும் போது, அந்தச் சமயத்தில் சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் கண்ணீர் விட்டு அழுததாகவும் சொல்லப்படுகிறது. சிலாங்கூர் மண்ணில் புத்ராஜெயாஅதன் நினைவாக சிலாங்கூர்-கூட்டரசு பிரதேச எல்லையில் ஓர் அழகிய வளை விதானவழி (Archway) உருவாக்கப்பட்டது. அதற்கு கோத்தா டாருல் ஏசான் (Kota Darul Ehsan) என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்த வளை விதானவழி பெட்டாலிங் ஜெயா மாநகருக்கும் பங்சார் நகரப் பகுதிக்கும் இடையில் கோலாலம்பூர் கிள்ளான் நெடுஞ்சாலையில் மிகக் கம்பீரமாக அமைந்து உள்ளது. அதன் பின்னர், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம் சா ஆலாமிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2001-ஆம் ஆண்டில் புத்ராஜெயா எனும் மற்றொரு கூட்டரசு பிரதேசத்தை உருவாக்கத் தீர்மானம் செய்யப்பட்டது. மறுபடியும் சுல்தான் சலாவுடிதீனிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். அந்த வகையில், சிலாங்கூர் மாநிலத்தின் இரு பெரிய நிலப் பகுதிகள் கோலாலம்பூர் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எழுதிக் கொடுக்கப்பட்டு உள்ளன. பொருளாதாரம்வேலை வாய்ப்புகள்மலேசியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் சிலாங்கூர். கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் பல இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சிலாங்கூர் மாநிலம் தீபகற்ப மலேசியாவின் நடுமையத்தில் இருப்பதால் அதற்குத் தொழில்துறையில் துரித வளர்ச்சி அடைவதற்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. உள்ளூர் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கித் தரப்படுகின்றன. இந்தோனேசியா, பிலிப்பீன்சு, வியட்நாம், மியன்மர், வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பேர் வந்து வேலை செய்கின்றனர். இந்தோனேசியாவிலிருந்து கள்ளத்தனமாக வந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மலேசியாவிற்குள் கள்ளத்தனமாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அந்த நிலைமை நாட்டின் பாதுகாப்பிற்கு மருட்டலாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மக்கள்தொகை புள்ளி விவரங்கள்2023-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி சிலாங்கூர் மாநிலத்தின் மக்கள்தொகை 7,214,400. இதில் 55.7 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்; 27.8 விழுக்காட்டினர் சீனர்கள்; 13.3 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 6 விழுக்காட்டினர் மற்றவர்கள். இதில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்களும்; வெளிநாட்டு நிரந்தரவாசிகளும் சேர்க்கப்படவில்லை. இனக்குழுக்கள்2020 புள்ளி விவரங்கள்
2010 புள்ளி விவரங்கள்
நகரங்களின் மக்கள்தொகை
மதம்அரசியல்அரசியலமைப்பு சட்டப்படி சிலாங்கூர் மாநிலத்தின் மன்னராகச் சுல்தான் சராபுதீன் இட்ரிஸ் சா அவர்கள் 2010-ஆம் ஆண்டிலிருந்து பொறுப்பில் இருக்கின்றார். பாக்காத்தான் அரப்பான் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ அமிருதீன் சாரி முதலமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக அசுமின் அலி இருக்கின்றார். இவர் பெரிக்காத்தான் நேசனல் கட்சியைச் சேர்ந்தவர். சிலாங்கூர் மாநில சட்டமன்றம் 2023சிலாங்கூர் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. மாநில சட்டமன்றம், சிலாங்கூர் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிகாலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை சட்டசபை கலைக்கப்பட வேண்டும்.
சிப்பாங் அனைத்துலக விமானநிலையம்நிர்வாகம்மாவட்டங்களின் பட்டியல்சிலாங்கூர் 9 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி மன்றங்கள்சிலாங்கூர் மாநிலத்தில் 12 உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன. அவையாவன:
சுற்றுலா இடங்கள்
கல்விதேசிய பல்கலைக்கழகங்கள்
தனியார் பல்கலைக்கழகங்கள்
அனைத்துலக பல்கலைக்கழகங்கள்
உடல்நல பராமரிப்புசிலாங்கூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள்:
பல்லூடகம்சிலாங்கூரில் பல வானொலி நிலையங்களும் தொலைக்காட்சி நிலையங்களும் இலவச சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றின் விவரங்கள்; தொலைக்காட்சி
வானொலிபல வானொலி நிலையங்கள் இலவச சேவைகளை வழங்கி வருகின்றன. அனைத்தும் எப்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றன. அவற்றின் விவரங்கள்:
செய்தித்தாட்கள்சிலாங்கூரில் வெளியாகும் செய்தித்தாட்கள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia