கோலா சிலாங்கூர் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Municipal Council); (சுருக்கம்: MPHS) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District); மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின்சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[3]
கோலா சிலாங்கூர் நகராட்சி, சிலாங்கூர் மாநிலச் சட்டக் கையேடு 18/78 (Selangor State Law Handbill 18/78) மூலம், 1978 பிப்ரவரி 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது; 119,452 எக்டேர் பரப்பளவைக் கொண்டது.[3]
மாவட்ட ஊராட்சிகள்
கோலா சிலாங்கூர் நகராட்சி ஐந்து கிராமப்புற மாவட்ட ஊராட்சிகளை (Local Council) கொண்டது.
கோலா சிலாங்கூர் ஊராட்சி (Kuala Selangor Local Council)
தஞ்சோங் காராங் ஊராட்சி (Tanjong Karang Local Council)
பத்தாங் பெர்ஜுந்தை ஊராட்சி (Batang Berjuntai Local Council)
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர்.[4]
இந்த மாவட்டத்தைக் கோலா சிலாங்கூர் பிரிவு; தஞ்சோங் காராங் பிரிவு; என இரு பிரிவுகளாக சிலாங்கூர் ஆறு பிரிக்கின்றது. சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தை ஊடுருவிச் செல்வதால் அந்த ஆற்றின் பெயரே கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.
கோலா சிலாங்கூர் நகராட்சிக்கு உடபட்ட கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.[5][6]
↑"YDP's Profile". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. Retrieved 7 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)