மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (MYX: 5014), (ஆங்கிலம்: Malaysia Airports அல்லது Malaysia Airports Holdings Berhad; மலாய்: Malaysia Airports Holdings Berhad (MAHB); என்பது மலேசியாவில் உள்ள பெரும்பாலான வானூர்தி நிலையங்களை நிர்வகிக்கும் மலேசிய வானூர்தி நிலைய நிறுவனமாகும். மலேசிய ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports) என்று சுருக்கமாக அழைப்பது வழக்கம். சிலாங்கூர், சிப்பாங், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ள மலேசியா ஏர்போர்ட்ஸ் அலுவலகத்தில் (Malaysia Airports Corporate Office) இதன் தலைமை அலுவலகம் உள்ளது.[1] பொதுமலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்; வானூர்தி நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 1992 நவம்பர் மாதம், மலேசிய போக்குவரத்து அமைச்சரால் முறையான உரிமம் பெற்றது. 1999-ஆம் ஆண்டு, இந்த மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (MAHB) வரையறுக்கப்பட்ட ஒரு பொது நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது. அதன் பிறகு கோலாலம்பூர் பங்குச் சந்தையின் (Kuala Lumpur Stock Exchange) முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனம் மலேசியாவில் உள்ள 39 வானூர்தி நிலையங்களைப் பராமரிக்கிறது. துணை நிறுவனங்கள்இதன் கண்காணிப்பில் முதன்மையான வானூர்தி நிலையமாக கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) விளங்குகிறது. இதன் கீழ் இயங்கும் துணை நிறுவனங்கள்:
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia