இத்தொகுப்பு வினை 800 0செ வெப்பநிலையில் நிகழ்கிறது.
இட்ரியம் ஆக்சைடின் வெப்பக் கடத்துத்திறன் 27 வாட்டுகள்/மீட்டர்•கெல்வின்) ஆகும்.[3]
கனிமத் தொகுப்பு வினை
கனிமச் சேர்மங்கள் தயாரிப்பில் இட்ரியம் ஆக்சைடு ஒரு முக்கியமான தொடக்கப் பொருளாக விளங்குகிறது. கரிம உலோக வேதியியலில், இட்ரியம் ஆக்சைடுஅடர் கந்தக அமிலம் மற்றும் அமோனியம் குளோரைடு ஆகியவற்றுடன் சேர்ந்து வினைபுரிந்து YCl3 சேர்மமாக மாறுகிறது.
சீரொளி அல்லது லேசர்கள்
தொலை நோக்கு திண்மநிலை சீரொளிப் பொருளாக Y2O3 கருதப்படுகிறது. குறிப்பாக இட்டெர்பியத்துடன் இணைந்த சீரொளிகள் ஒரு மாசாக தொடர் செயல்பாடு[4] மற்றும் துடிப்புச் செயல்பாடு[5] ஆகிய இரண்டு வகைகளிலும் திறனுள்ள செயல்பாட்டை அனுமதிக்கின்றன.
அதிக ச் செறிவு கிளர்ச்சி நிலை (1% ஒழுங்கு) மற்றும் குறைவுக் குளிர்ச்சி நிலை இரண்டிலும் சீரொளிஅதிர்வெண் தணிப்பது மற்றும் கட்டுப்படுத்த இயலாத அகண்ட அலைவரிசை உமிழ்வு ஆகியன நடைபெறுகின்றன.[6]
மேற்கோள்கள்
↑Yong-Nian Xu; Zhong-quan Gu; W. Y. Ching (1997). "Electronic, structural, and optical properties of crystalline yttria". Phys. Rev.B56 (23): 14993–15000. doi:10.1103/PhysRevB.56.14993. Bibcode: 1997PhRvB..5614993X.
↑"Yttrium compounds (as Y)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
↑P. H. Klein and W. J. Croft (1967). "Thermal conductivity , Diffusivity, and Expansion of Y2O3, Y3Al5O12, and LaF3 in the Range 77-300 K". J. Appl. Phys.38 (4): 1603. doi:10.1063/1.1709730. Bibcode: 1967JAP....38.1603K.