ஜஞ்சிரா இராச்சியம்
![]() ![]() ஜாஞ்சிரா இராச்சியம் (Janjira State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முருத்-ஜாஞ்சிரா கோட்டை ஆகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் முருத் தாலுகா, ரோகா தாலுகா மற்றும் ஸ்ரீவர்தன் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாஞ்சிரா இராச்சியம் 839 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,10,389 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த சித்தியர்கள் இசுலாமிய அடிமை வீரர்கள் ஆவார். ஜாஞ்சிரா இராச்சியத்தின் கீழ் தற்கால குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் ஜாப்ராபாத் இராச்சியம் இருந்தது. வரலாறுமராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஜாஞ்சிரா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஜாஞ்சிரா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. ஜாஞ்சிரா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ஜாஞ்சிரா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜாஞ்சிர இராச்சியம் மகாராட்டிரா மாநிலத்தில் இணைக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த ஜாஞ்சிரா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.[1] ஜாஞ்சிராவின்வசீர்கள்
ஜாப்ராபாத்தின் தானேதார்கள் மற்றும் ஜாஞ்சிராவின் வசீர்கள்
நவாப்புகள்
இதனையும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia