லுபோக் அந்து மக்களவைத் தொகுதி
லுபோக் அந்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lubok Antu; ஆங்கிலம்: Lubok Antu Federal Constituency; சீனம்: 卢布安图联邦选区) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவில்; அசா ஜெயா மாவட்டம்; சிமுஞ்சான் மாவட்டம்; கெடோங் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P203) ஆகும்.[5] லுபோக் அந்து மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து லுபோக் அந்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பெத்தோங் மாவட்டம்பெத்தோங் மாவட்டம் (Betong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[7] இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தோங் நகரம். பெத்தோங் மாவட்டம் பாரம்பரியமாக இபான், மலாய் மக்கள் மற்றும் சீனர் மக்களின் தாயகமாக உள்ளது. பெரும்பாலான இபான் மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர். முன்பு இந்த மாவட்டம், சரிபாசு (Saribas) என்ற பெயரில் செரி அமான் பிரிவின் (Sri Aman Division) நிர்வாகத்தின் கீழ் இருந்தது. இன்றும் சரவாக் மக்களிடையே சரிபாசு எனும் சொல் புழக்கத்தில் உள்ளது. சரிபாசுசரிபாசு அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாசு பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன. இங்குள்ள இபான் மக்கள், சரவாக் மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடியினர். இவர்கள் கடல் டயாக் (Sea Dayaks) மக்கள் என்று அழைக்கப் படுவதும் உண்டு.[8][9] லுபோக் அந்து மக்களவைத் தொகுதிலுபோக் அந்து தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[10] சரவாக் பூமிபுத்ரா (22.6%) மலாயர் (72%) சீனர் (5%) இதர இனத்தவர் (0.4%)
லுபோக் அந்து தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.37%) பெண் (50.63%)
லுபோக் அந்து தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.67%) 21-29 (19.73%) 30-39 (20.49%) 40-49 (16.47%) 50-59 (16.68%) 60-69 (11.8%) 70-79 (6.01%) 80-89 (1.62%) + 90 (0.53%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia