செரியான் மக்களவைத் தொகுதி
செரியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Serian; ஆங்கிலம்: Serian Federal Constituency; சீனம்: 西连联邦选区) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில்; செரியான் மாவட்டம்; தெபெடு மாவட்டம்; சிபுரான் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P199) ஆகும்.[5] செரியான் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து செரியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] செரியான் பிரிவுசெரியான் பிரிவு (Serian Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி சரவாக், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி பிரிவாகச் செயல்படுகிறது.[7] 1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு சரவாக்கில் ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும். செரியான் நகரம்கூச்சிங் மாநகரில் இருந்து சுமார் 40 மைல் (64 கி.மீ.) தொலைவில் செரியான் பிரிவு அமைந்துள்ளது. மக்கள் தொகையில் 65% பிடாயூ பழங்குடி பூர்வீக மக்கள். மற்ற முக்கிய இனக்குழுக்கள் இபான், சீனர் மற்றும் மலாய்க்காரர்கள். செரியான் நகரம் அதன் வளமான நிலப் பகுதியுடன்; சாலை மற்றும் நீர் போக்குவரத்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காடுகளில் கிடைக்கும் அனைத்து வகையான காட்டுப் பொருட்களையும் இங்கு காணலாம். அண்மைய காலமாக, இந்த விளைபொருட்களில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் கலிமந்தான் காடுகளில் இருந்து கொண்டு வரப் படுகின்றன. விலையும் குறைவு என அறியப்படுகிறது. செரியான் மக்களவைத் தொகுதிசெரியான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சரவாக் பூமிபுத்ரா (79%) மலாயர் (9.7%) சீனர் (10.3%) இதர இனத்தவர் (1%)
செரியான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.78%) பெண் (49.22%)
செரியான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.35%) 21-29 (19.87%) 30-39 (20.48%) 40-49 (17.37%) 50-59 (16.78%) 60-69 (11.81%) 70-79 (5.4%) 80-89 (1.53%) + 90 (0.41%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia