தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தஞ்சாவூர் தொடருந்து நிலையம் (Thanjavur Junction railway station, நிலையக் குறியீடு:TJ) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது.[1]
கண்ணோட்டம்தஞ்சாவூர் நகரம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது கால இடைவெளியில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. இந்த காலகட்டத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவை தென்னிந்திய கட்டிடக்கலைக்கு சிறந்த சாட்சியாக திகழ்கின்றன. அதனால் இந்நகரம் யாத்திரை மற்றும் சுற்றுலா தளமாக திகழ்கிறது.[2] வரலாறுதஞ்சாவூர் ஆனது கோரமண்டல் கடற்கரையின், முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது. சென்னையை - திருச்சிராப்பள்ளியுடன், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (மாயாவரம்) மற்றும் தஞ்சாவூர் சந்திப்புகள் வழியாக இணைக்கிறது. 1861 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிரேட் தென்னிந்திய இரயில்வே (GSIR) ஆனது 125 கி.மீ (78 மைல்) தொலைவில், (5 அடி 6 அங்குலம்) அளவில் அகலப்பாதையாக நாகப்பட்டினம் முதல் திருச்சிராப்பள்ளி இடையே கட்டியது, மேலும் இந்த பாதை அடுத்த ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது சென்னைக்கு தெற்கே ஒரு புதிய வளர்ச்சியாக இருந்தது. 1874 இல் தென் இந்திய ரயில்வே கம்பெனியால் கிரேட் தென்னிந்திய இரயில்வே (GSIR) கையகப்படுத்திய பின்னர், நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி பாதை 1875இல் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்குலம்) அகல மீட்டர் பாதையாக மாற்றப்பட்டது. தென் இந்திய ரயில்வே கம்பெனி 1880 ஆம் ஆண்டில் சென்னை முதல் தூத்துக்குடி வரை 715 கி.மீ (444 மைல்) (மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக) நீள மீட்டர் பாதை டிரங்க் பாதையை அமைத்தது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 23.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7] உள்ளூர் பாரம்பரிய கலாச்சார சின்னமான தஞ்சாவூர் கோபுர முகத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் முகத்துவாரம் அமைக்கப்படுகின்றன. வண்ணமிகு பாவுகற்கள் கொண்டு நான்கு சக்கர, இரு சக்கர, மூன்று சக்கர, பேருந்து நிறுத்திமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் எளிதில் பராமரிப்பு பணிகள் செய்வது எளிதாகும். பல்லடுக்கு வாகன நிறுத்திமிடங்கள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதலாக ஒர் உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்படுகின்றன.[8][9][10][11] வழித்தடங்கள்தஞ்சாவூர் சந்திப்பிலிருந்து மூன்று வழித்தடங்கள் கிளையாக பிரிகின்றன:
தொடருந்து சேவைகள்விரைவுத் தொடருந்து
பயணிகள் தொடருந்து
படங்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia