மலேசிய உயர்க் கல்வி அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய உயர்க் கல்வி அமைச்சு என்பது மலேசியாவின் உயர்க் கல்வித் துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.
உயர்க்கல்வி (Higher Education), பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic), சமூகக் கல்லூரி (Community College), மாணவர்கள் கடன் (Students Loan), தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation), தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer) ஆகியவற்றிற்கு இந்த அமைச்சு பொறுப்பு வகிக்கிறது.
பொறுப்பு துறைகள்
கல்வி முறை (Education System)
பாடநூல்கள் (Textbooks)
மொழிக் கொள்கை (Language Policy)
மொழிப் பெயர்ப்பு (Translation)
உயர்க்கல்வி (Higher Education)
பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic)
சமூகக் கல்லூரி (Community College)
மாணவர்கள் கடன் (Students Loan)
தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation)
தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer)
அமைப்பு
உயர் கல்வி அமைச்சர்
உயர்கல்வி துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
துறைகள்
உயர்கல்வித் துறை
(Department of Higher Education)
(Jabatan Pendidikan Tinggi) (JPT)
(Director General: Dr. Siti Hamisah Binti Tapsir)
பல்தொழில் பயிற்சிப்பள்ளி துறை
(Department of Polytechnic Education)
(Jabatan Pengajian Politeknik) (JPP)
(Director General: Datuk Hj Mohlis Bin Jaafar)
சமூகக் கல்லூரி துறை
(Department of Community Colleges)
(Jabatan Pengajian Kolej Komuniti) (JPKK)
(Director General: Asc. Prof. Kamarudin Kasim)
மலேசியர் தகுதிகள் நிறுவனம்
(Malaysian Qualifications Agency) (MQA)
(Agensi Kelayakan Malaysia)
தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம்
(National Higher Education Fund Corporation)
(Perbadanan Tabung Pendidikan Tinggi Nasional) (PTPTN)[1]