கோலா லங்காட் மக்களவைத் தொகுதி
கோலா லங்காட் மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Kuala Langat; ஆங்கிலம்: Kuala Langat Federal Constituency; சீனம்: 瓜拉冷岳国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P112) ஆகும். கோலா லங்காட் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் 1959-ஆம் ஆண்டில் இருந்து கோலா லங்காட் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பந்திங் நகரம்பந்திங் நகரம், சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தின் தலைப்பட்டணம் ஆகும். சிலாங்கூரின் முன்னாள் அரச நகரமான ஜுக்ரா, பந்திங் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. இந்த நகருக்கு மிக அருகில் மோரிப் கடற்கரைகள் உள்ளன.[5] 1950-ஆம் ஆண்டுகளில் பந்திங் சுற்று வட்டாரங்களில் நிறைய ரப்பர் தோட்டங்கள்; தென்னை தோட்டங்கள்; காபி தோட்டங்கள் இருந்தன. அவற்றுள் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். 1882-ஆம் ஆண்டில் பந்திங், ஜுக்ரா பகுதிகளில் பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. முதலில் இது ஒரு வாழைத் தோட்டம் ஆகும். பின்னர் ஆமணக்கு தோட்டம்; அதன் பின்னர் காபி பயிர்த் தோட்டம். அதற்கு அடுத்து தென்னைத் தோட்டமாக மாறியது. இந்தத் தோட்டத்திற்குத் தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.[6] கோலா லங்காட் மாவட்டம்கோலா லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம், கிள்ளான் மாவட்டம்; தெற்கில் சிப்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன..[7] கோலா லங்காட் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: பந்திங்; ஜுக்ரா; தெலுக் டத்தோ; மோரிப் மற்றும் கேரி தீவு. கோலா லங்காட் மாவட்டம் எண்ணெய் பனை வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் மாவட்டமாகும். கோலா லங்காட் மக்களவை தொகுதி
கோலா லங்காட் மக்களவை தேர்தல் முடிவுகள்
கோலா லங்காட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia