இகான் மக்களவைத் தொகுதி
இகான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Igan; ஆங்கிலம்: Igan Federal Constituency; சீனம்: 伊甘联邦选区) என்பது மலேசியா, சரவாக், முக்கா பிரிவு; சரிக்கே பிரிவு; சிபு பிரிவு ஆகிய பிரிவுகளின் தாரோ மாவட்டம்; மாத்து மாவட்டம்; மெராடோங் மாவட்டம்; சிபு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P207) ஆகும்.[5] இகான் மக்களவைத் தொகுதி 2005-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2008-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2008-ஆம் ஆண்டில் இருந்து இகான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சிபு பிரிவுசிபு பிரிவு (Sibu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 8,278.3 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு (Kapit Division) மற்றும் மிரி பிரிவுக்கு (Miri Division) அடுத்த நிலையில், மூன்றாவது பெரிய பிரிவு. 1862-ஆம் ஆண்டில் சிபுவில் குடியேறிய ஜேம்சு புரூக் (James Brooke) என்பவரால் டயாக் மக்களின் (Dayak People) தாக்குதல்களைத் தடுக்க, சிபு நகரில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.[7] அதனைத் தொடர்ந்து, சீனர்களின் (Chinese Hokkien) ஒரு சிறிய குழுவினர், கோட்டையைச் சுற்றியுள்ள நகரப் பகுதியில், பாதுகாப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் குடியேறினார்கள்.[8] அதுவே சிபுநகரின் முதல் குடியேற்றம் என அறியப்படுகிறது. 1901-ஆம் ஆண்டு, சிபு குடியேற்றப் பகுதிக்குள் வோங் நய் சியோங் (Wong Nai Siong) தலைமையில் சீனாவின் புசியான் மாநிலத்தில் (Fujian) இருந்து 1,118 பூச்சௌ சீனர்கள் (Fuzhou Chinese) ஒரு பெரிய அளவிலான குடிபெயர்வை மேற்கொண்டனர். இந்த நிகழ்வு, சிபுவில் "நியூ புசூ" என்று பிரபலமாகக் குறிப்பிடப் படுகிறது.[9] இகான் மக்களவைத் தொகுதிஇகான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[10] சரவாக் பூமிபுத்ரா (60.7%) மலாயர் (35.6%) சீனர் (3.3%) இதர இனத்தவர் (0.4%)
இகான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.41%) பெண் (50.59%)
இகான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.68%) 21-29 (23%) 30-39 (21.79%) 40-49 (15.98%) 50-59 (15.39%) 60-69 (10.46%) 70-79 (5.08%) 80-89 (1.3%) above 90 (0.31%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia