மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி
மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kalabakan; ஆங்கிலம்: Kalabakan Federal Constituency; சீனம்: 加拉峇干国会议席) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு; இலுண்டு மாவட்டம்; பாவு மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P192) ஆகும்.[5] மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி 1977-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1978-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1978-ஆம் ஆண்டில் இருந்து மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பாவு மாவட்டம்பாவு மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம்.[7][8] 1840-ஆம் ஆண்டுகளில் பாவு மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போர்னியோ நிறுவனத்தினால் (The Borneo Company) தங்கச் சுரங்கத் தொழில்கள் கையகப் படுத்தப்பட்டன. 1921-இல், சுரங்கத் தொழில்களில் வருமானம் குறைவானது. அதன் தொடர்ச்சியாகச் சுரங்கங்கள் மூடப்பட்டன.[9] பிரதாக் சிகரம்1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. பின்னர் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல், அந்தச் சுரங்கங்கள் மீண்டும் மூடப்பட்டன.[10] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[11] ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, பிடாயூ மக்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக, பாவு பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் சாகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது மாஸ் காடிங் மக்களவைத் தொகுதிமாஸ் காடிங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[12] சரவாக் பூமிபுத்ரா (73.7%) மலாயர் (7.2%) சீனர் (17.6%) இதர இனத்தவர் (1.5%)
மாஸ் காடிங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.27%) பெண் (48.73%)
மாஸ் காடிங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.47%) 21-29 (21.45%) 30-39 (19.52%) 40-49 (16.99%) 50-59 (16.74%) 60-69 (11.32%) 70-79 (5.39%) 80-89 (1.7%) + 90 (0.41%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia