இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி
இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Stampin; ஆங்கிலம்: Stampin Federal Constituency; சீனம்: 实淡宾国会议席) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P196) ஆகும்.[5] இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி 1996-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1999-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1999-ஆம் ஆண்டில் இருந்து இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கூச்சிங் பிரிவுகூச்சிங் பிரிவு என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். முன்பு முதல் பிரிவு (First Division) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் நவீன சரவாக்கின் மையம் மற்றும் தொடக்கப் புள்ளியாகும். கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். கூச்சிங் பிரிவின் இன அமைப்பை, சரவாக் முழுமைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சற்றே வேறுபட்டது. மலாய்க்காரர்களும் மற்றும் சீனர்களும் கூச்சிங் நகரில் பெரும்பான்மையான இனக் குழுக்களாக உள்ளனர். கூச்சிங் பிரிவு, சரவாக் மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட பிரிவு ஆகும். அந்த வகையில் கூச்சிங் பிரிவில் வசிக்கும் பெரும்பாலானோர் கூச்சிங் மாவட்டத்தில் வசிக்கின்றனர். இஸ்தாம்பின் மக்களவைத் தொகுதிஇஸ்தாம்பின் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.56%) பெண் (49.44%)
இஸ்தாம்பின் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.77%) 21-29 (22.21%) 30-39 (23.09%) 40-49 (19.21%) 50-59 (13.3%) 60-69 (9.27%) 70-79 (4.55%) 80-89 (1.32%) + 90 (0.28%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia