கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி
கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Samarahan; ஆங்கிலம்: Kota Samarahan Federal Constituency; சீனம்: 哥打三马拉汉国会议席) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின், சமரகான் பிரிவு, செரியான் பிரிவு, கூச்சிங் பிரிவு ஆகிய 3 பிரிவுகளில்; சமரகான் மாவட்டம்; அசா செயா மாவட்டம்; செரியான் மாவட்டம்; கூச்சிங் மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P197) ஆகும்.[5] கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1990-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சமரகான் மாவட்டம்சமரகான் மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் சமரகான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோத்தா சமரகான் நகரம்.[7][8] சமரகான் மாவட்டம்; அசா ஜெயா மாவட்டம்; சாடோங் ஜெயா துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழக (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[9] கோத்தா சமரகான்1983 ஆகஸ்டு 19-ஆம் தேதி முவாரா துவாங் எனும் துணை மாவட்டம்; முழு மாவட்ட நிலைக்குத் தகுதி உயர்த்தப் பட்டது. அதன் பின்னர் சமரகான் மாவட்டம் என புதுப் பெயரில் மாற்றம் கண்டது. மாவட்டத் தகுதி உயர்வுக்கு ஏற்ற வகையில், சமரகான் நகர்ப் பகுதியில் இருந்த முவாரா துவாங் சந்தையும் (Muara Tuang bazaar) ஒரு நகரம் எனும் தகுதிக்கு நிலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கோத்தா சமரகான் என்று இப்போது அனைவராலும் அறியப் படுகிறது. கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதிகோத்தா சமரகான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.63%) பெண் (49.37%)
கோத்தா சமரகான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (8.39%) 21-29 (25.19%) 30-39 (23.72%) 40-49 (17.6%) 50-59 (12.31%) 60-69 (7.79%) 70-79 (3.62%) 80-89 (1.16%) + 90 (0.21%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia